மணக்கால் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
மணக்கால் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612802
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர்
அறிமுகம்
மணக்கால் எனும்பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்கள் உள்ளன. இந்த மணக்கால் கிராமம் அவளிவநல்லூர் மேற்கில் உள்ள முனியூர் சென்று, அங்கிருந்து வடக்கில் 2 கிமி தூரம் சென்றால் உள்ளது. சிறிய கிராமம் தான் இங்குள்ள கிராம நடுநிலைப்பள்ளியின் அருகில் சிறிய குளத்தின் அருகில் ஒற்றை லிங்கமூர்த்தி மட்டும் இருந்தது. அதற்க்கு உள்ளூர் வெளியூர் மக்கள் இணைந்து கிழக்கு நோக்கிய ஒரு தகர கொட்டகை கட்டியுள்ளனர். இறைவனுக்கு இங்கு அகத்தீஸ்வரர் என பெயரிடப்பட்டுள்ளது, பார்க்க கம்பீரமாக நடுத்தர அளவில் உள்ளார். அருகில் கிழக்கு நோக்கிய ஒரு சிறிய விநாயகரும், தென் திசை நோக்கி ஒரு சிறிய அம்பிகையும் உள்ளார்கள். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணக்கால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி