Thursday Dec 26, 2024

போத்தநதி திருவாலவாயுடையர் சிவன் கோயில், மதுரை

முகவரி :

போத்தநதி திருவாலவாயுடையர் சிவன் கோயில்,

போத்தநதி, வில்லூர்,

மதுரை மாவட்டம் – 625707.

இறைவன்:

திருவாலவாயுடையர்

அறிமுகம்:

 மதுரை அருகே  வில்லூர் பகுதியில் உள்ள போத்தநதி என்ற ஊரில் கி.பி 13ம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன்  சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும்,  சிதைந்த நிலையில் சிவன் கோயிலும்  கண்டறியப்பட்டன. செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கௌசீக நதிக்கரையின்  மேற்கு பகுதியில் போத்தன் என்ற சிற்றரசர் ஆட்சி புரிந்ததாகவும் அவர் பெயரில் போத்தநதி என்ற ஊர் பெயர் வந்ததாகவும் அறியப்படுகிறது.

இவ்வூரின் தெற்கு பகுதியில் போத்தன் ஊரணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை,  கோபுரம்,  முன் மண்டபம் கொண்ட கோயில் கண்டறியப்பட்டது. செங்கற்கள் சாந்து சேர்த்து கட்டிய  கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்தும், சிற்பங்கள் சிதைந்த நிலையிலும் உள்ளன. கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும்,  உட்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்ததால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலர்கள் ஆண்,  பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும்,  பூ மொட்டு போதிகையுடன்  தூணின் இரு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளன. 


 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட கல்வெட்டில் 8 வரி  சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச் (1216- 1239) சேர்ந்தவையாகும். திருவாலவாயுடையர் என்று அழைக்க கூடிய சிவன் கோயிலுக்கு சந்தியா தீபம் ஏற்றிட நிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டின் காலம் கி.பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது’’ என்றார்.

காலம்

கி.பி 13ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

போத்தநதி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top