பொறையார் திரௌபதி அம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில்,
பொறையார்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609307.
இறைவி:
திரௌபதி அம்மன்
அறிமுகம்:
நாகை மாவட்டம் பழையாறு சிறப்புமிக்க திரௌபதி அம்மன் ஆலயம் ஒன்று உள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் ஆதி கால கட்டிடக்கலை மன்னர் காலத்தில் கட்டப்பட்டது போல் இருந்ததாம். பல்லாண்டுகள் இந்த நிலையில் இந்த ஆலயத்தை சில காலம் முன்பு சிறிய கோயிலாக கட்டி வழிபட்டு வந்துள்ளனர். வழிபட்ட பக்தர்களுக்கு அம்மனின் அருளால் நல்லவை பல நடக்கவும் பக்தர்கள் கோயிலை விரிவாக்கம் செய்ய தீர்மானித்துள்ளனர். அதைத்தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு கல் கட்டடம் ஆக மாற்றம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்துள்ளனர். அதன்பின் 2020 ஆம் ஆண்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு சில சன்னதிகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. சீர்காழியில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் தரங்கம்பாடியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திரவுபதி அம்மன் கோவில் தெருவில் ஆலயம் அமைந்துள்ளது
புராண முக்கியத்துவம் :
கிழக்கு நோக்கிய கோயில் முன் மண்டபத்தின் மேல் திரெளபதி அம்மனின் சுதை உருவ தரிசனம் கிடைக்கிறது. கொடிமர மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம், அரவான், காளி அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. பிரகாரத்தில் விநாயகர் சங்கடஹர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், துர்க்கை மற்றும் காசி காலபைரவரை காணலாம். மகாமண்டபத்தில் பிரத்தியங்கிராதேவி. கடோத்கஜன். முத்து ராவுத்தர். ஐயப்பன். லட்சுமி நாராயணன் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், அர்ஜுனன், கிருஷ்ணன், கோமதி அம்மன், உற்சவ விக்ரகங்களை தரிசனம் கிட்டுகிறது.
கிழக்கு நோக்கிய கருவறையில் கையில் கிளியுடன் நின்ற கோலத்தில் அற்புதமாய் காட்சி தருகிறாள் திரௌபதி அம்மன். குழந்தை வரம் உள்பட அனைத்துப் பேறுகளையும் அருளும் பெரும் வரப்பிரசாதி இவர் என்கிறார்கள்.
நம்பிக்கைகள்:
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் அம்பாளுக்கு 5 திங்கட் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அந்த பாக்கியத்தை அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்பாளுக்கு மனம் நிறைந்த வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்தால் எல்லாவிதத் தடைகளும் நீங்கி திருமணம் கைகூடும்.
ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் முதல் மகரஜோதி வரையிலான காலத்தில் பக்தர்கள் தினந்தோறும் பஜனை செய்து வழிபாடு செய்கிறார்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பைரவாஷ்டமி அன்றே பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு விசேஷ பிரார்த்தனை செய்கின்றனர். அட்சதையை கையை வைத்துக்கொண்டு பைரவ மந்திரத்தை 1008 முறை ஜபித்து அதை அவர் காலடியில் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்கின்றனர். இப்படி செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும், கடன் பிரச்சனை அகலும், தொழில் வளர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை.
காலபைரவருக்கு முன்னால் நந்தி பலிபீடம் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட விஸ்வநாதன் மற்றும் மனோன்மணி அம்பாள் உள்ளனர் அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் பக்தர்களை விஸ்வநாத மனோன்மணி அம்பாளுக்கு தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்தும் நந்தியாவட்டை, கொன்றை மலர், தாமரை, நாகலிங்கம், வில்வம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
திருவிழாக்கள்:
சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமைகளில் கொடியேற்றத்துடன் பதினைந்து நாள் உற்சவம் தொடங்குகிறது. 15ஆம் நாள் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம். ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அன்று திருவிளக்கு பூஜை. நவராத்திரி. உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் கந்தசஷ்டி திருவிழா. வைகுண்ட ஏகாதசி அன்று அனுமதி லட்சுமிநாராயணன் சிறப்பு திருமஞ்சனம். பங்குனி உத்திரத்தன்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள். கிருஷ்ண ஜெயந்தி அன்று லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன ஆண்டு முழுக்க திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பொறையார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி