பொரவாச்சேரி சொர்ணபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பொரவாச்சேரி சொர்ணபுரீஸ்வரர் சிவன்கோயில்,
பொரவாச்சேரி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611108.
இறைவன்:
சொர்ணபுரீஸ்வரர்
அறிமுகம்:
பொருள்வைத்தசேரி என்பதே பொரவாச்சேரி என ஆனது. இந்த பொரவாச்சேரி திருவாரூர்- நாகை சாலையில் சிக்கலுக்கு அடுத்து உள்ளது. திருமங்கையாழ்வார் சூளாமணி விகாரையிலிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கவர்ந்து இவ்வூரில் வைத்திருந்ததால் இது பொருள் வைத்த சேரி என்று பெயர் கொண்டது என்பர். இரப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் வாழ்ந்த ஊராதலால் புரவலர்சேரி என இப்பெயர் ஆகலாம். இவ்வூரில் இரண்டு சிவன்கோயில்கள் உள்ளன. ஒன்று கந்தசாமி கோயில் என அழைக்கப்படுகிறது. அடுத்து பிரதான சாலையை ஒட்டி ஒரு சிவன்கோயில் உள்ளது. இக்கோயில் சொர்ணபுரீஸ்வரர் கோயிலாகும் கோயிலின் பின்புறம் பெரிய குளம் ஒன்றுள்ளது ஆனால் நாற்புறமும் வீடுகள் கடைகள் என சூழ்ந்து ஆக்கிரமிப்பில் சுருங்கி கிடப்பதே வெளியில் தெரியாது.
கோயில் முழுமையும் கருங்கல் கொண்டே பெரும்பகுதி கட்டப்பட்டுள்ளது, நகரத்தார் திருப்பணி. முகப்பு மொட்டை கோபுரம் அதனை தாண்டி உள்ளே இறைவன் சொர்ணபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியவர் முகப்பில் மண்டபம் அதில் தெற்க்கு நோக்கிய அம்பிகை சௌந்தரநாயகி இறைவன் முன்னர் உள்ள மண்டபம் விதான ஓவியங்கள் அழகூட்டுகின்றன. அழகிய நந்தியும் இறைவன் முன்னர் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறது. கோஷ்டத்தில் விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சிற்றாலயங்கள் விநாயகர் முருகன் மகாலட்சுமிக்கு உள்ளன. வடகிழக்கில் நவகிரகம் பைரவர்கள் உள்ளன.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பொரவாச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி