பையனுர் ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி
பையனுர் ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), பையனுர், செங்கல்பட்டு மாவட்டம்- 603104.
இறைவன்
இறைவன் : ஸ்ரீ எட்டீஸ்வரர் இறைவி : ஸ்ரீ எழிலார்குழலி
அறிமுகம்
சென்னை- மாமல்லபுரம் OMR சாலையில் பையனுர் கிராமம் உள்ளது. இங்கிருந்து மாமல்லபுரம் 6 கி.மீ தொலைவில் உள்ளது. ஸ்ரீ எழிலார்குழலி அம்பாள் சமேத ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோயில், விஜயநந்தி விக்ரம பல்லவனால் கி.பி. 773 ஆம் ஆண்டு கட்டப்பட்டு கால வெள்ளத்தில் முழுவதும் சிதிலமாகி பல ஆண்டுகளாக பூஜைகள் இல்லாமல் இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு புனர் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இரண்டு வேளை பூஜைகள் நடைபெறுகின்றன. தொண்டை நாட்டை சேர்ந்த சிறுகுறிப்புதொண்ட நாயனார் இங்குள்ள இறைவனை புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார். இடைக்காட்டு சித்தர் இங்குள்ள ஈசனை வழிபட்டதாக சில குறிப்புகள் உள்ளன. கொடிமரம், நந்தி மண்டபம் கூடிய இக்கோயிலில் துவார பாலர்களை தரிசனம் செய்து உள்ளே சென்றால் ஸ்ரீ எட்டீஸ்ஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார். தென் திசை நோக்கிய அம்பாள் சன்னதி. பஞ்ச கோஷ்ட சன்னதிகளுடன் ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ வள்ளலார், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சூரியன் ஆகிய சன்னதிகள் உள்ளன. குளத்தை செப்பனிடும்போது கிடைத்த 2000 ஆம் ஆண்டு பழமையான சிவலிங்கம் தனி சன்னதியில் உள்ளது. தொடர்புக்கு திரு மூர்த்தி- 99415 34893, திரு சுந்தரராஜ்-9566184387.
நம்பிக்கைகள்
பரிகார தலம் தீராத வழக்கு, திருமணத்தடை, குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது இக்கோயில்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பையனுர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை