Thursday Dec 19, 2024

பேளூர் அஷ்டபுஜ வேணுகோபாலசுவாமி திருக்கோயில், சேலம்

முகவரி

பேளூர் அஷ்டபுஜ வேணுகோபாலசுவாமி திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம் – 636104. தொலைபேசி எண்: 9894689629 / 9677554839

இறைவன்

இறைவன்: அஷ்டபுஜ வேணுகோபாலசுவாமி இறைவி: மரகதவல்லி தாயார்

அறிமுகம்

சேலம் மாவட்டம் பேளூரில் அஷ்டபுஜ வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது. இது சேலம் – ஆத்தூர் நெடுஞ்சாலையில் வாழப்பாடிக்கு வடக்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பழமை வாய்ந்த அஷ்டபுஜ வேணுகோபாலசுவாமி கோயில், வெள்ளை ஆற்றின் வடகரையில் உள்ள பேளூரில் அமைந்துள்ளது. கோயிலின் புராணக்கதை அர்ஜுனன் மற்றும் மகாபாரதத்திற்கு முந்தையதாக நம்பப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

அன்னை பராசக்தி பல அவதாரங்களை பூமியில் எடுத்தாள். காமாட்சி, விசாலாட்சி, உலகம்மை, பார்வதி, தாட்சாயணி. இப்படி பல பெயர்களில் அவதரித்த அவள், பழங்கால மதுரையில் மீனாட்சி என்ற பெயரில் தங்கினாள். அப்போது அவளுக்கு ஒரு பக்தை இருந்தாள்.அவள் மீனாட்சியை குழந்தையாக நினைத்து தாலாட்டு பாடுவாள், தூங்க வைப்பாள், தன்னை மீனாட்சியின் அன்னையாகவே உருவகம் செய்து, பக்தியில் ஆழ்ந்தாள். பாரதியார் கண்ணனைக் காதலியாக கருதியது போல் அவளது பக்தியை மெச்சிய மீனாட்சி, முற்பிறவியில், அவளை காஞ்சனமாலை என்ற பெயரில் அரசியாகப் பிறக்கும்பிடியும், அவளுக்கு தான் மகளாகப் பிறப்பதாகவும் வாக்களித்தாள்.அதன்படியே மீனாட்சியின் பிற்கால கோயில் அமைந்தது. அவளுக்கே பெருமாள் அண்ணனாக இருந்து, சுந்தரேஸ்வரரை மணம் முடித்து வைத்தார். முந்தைய பராசக்தி வடிவமான மீனாட்சி, பெருமாளுக்கு மட்டுமல்ல.. அனைத்து உயிர்களுக்கும் தாயாகத்தான் இருந்திருக்கிறாள். அவ்வாறு அவள் தாயாக அமர்ந்த தலம் தான், தனி சன்னதியில், வயதான தோற்றத்துடன் மரகதவல்லி மீனாட்சி என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறாள். பெருமாளின் வடிவம் : இந்த விஷ்ணுவுக்கு எட்டுக்கரங்கள் உள்ளன. இதில் இரண்டு கைகள் மகாவிஷ்ணுவுக்குரியவை. கீழேயுள்ள இரண்டு கரங்கள் கிருஷ்ணாவதார கைகள். நான்கு கைகள் பலராமனுக்குரியவை. இடது கன்னம் பெண் கன்னம். தொட்டுப்பார்த்தால் வழுவழுப்பாக இருக்கும். வலது கன்னம் ஆண் கன்னம். சொர சொரப்பாக இருக்கும். தலைக்கு மேல் ஏழு தலை ஆதிசேஷன் உள்ளது. இடது கால் பெண்கால், இதன் மேல் பகுதியில் “பஞ்சகச்சம்” வைத்து கட்டியது போல புடவை அமைப்பு உள்ளது. வலது ஆண்கால். வலதுபக்கம் பசுவும், கன்றும், இடது பக்கம் பசுவும், காளையும் உள்ளன. அஷ்டமி, நவமி, ஏகாதசி திதிகளில் மரகதவல்லி மீனாட்சிக்கு அபிஷேகம் நடக்கும். வசிஷ்டர் இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது. வாசலில் வீரஆஞ்சநேயர் உள்ளார்.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் மகம், விசாகம், சதயம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நாட்களில் திருமணத்தடை உள்ளவர்கள், கடன் தொல்லை, குடும்பத்தகராறு உள்ளவர்கள் வழிபட்டால் நிவர்த்தியாவதாக ஒரு நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

பெருமாள் அதிகபட்சமாக நான்கு கைகளுடன் அருள்பாலிப்பார் ஆனால் இங்கு பெருமாள் (அஷ்டபுஜ) எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதேசி, மார்கழி திருமஞ்சனம், திருமஞ்சன பூஜை, புரட்டாசி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பேளூர் கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வாழப்பாடி

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர், திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top