Thursday Dec 26, 2024

பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பெருநகர் (அஞ்சல்), மானாம்பதி (வழி), உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603404 போன்: +91 9655793042, 9444341202

இறைவன்

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பட்டுவதானாம்பிகை

அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள பெருநகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. உத்திரமேரூர் அருகே உள்ள பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு பட்டுவதானாம்பிகை என்று பெயர். தை பூசம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயில் வந்தவாசி காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பெருநகர் காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே வந்தவாசி சாலையில் 22 கிமீ தொலைவிலும், தெற்கே வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 18 கிமீ தொலைவிலும், உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் 16 கிமீ தொலைவிலும் உள்ளது.

புராண முக்கியத்துவம்

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1073ல் எடுப்பித்து விளக்கு வைத்து சென்றுள்ளான். இக்கோயிலில் பலகல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் இராஜராஜனுடைய கல்வெட்டு தொன்மையானது, இங்குள்ள ஜேஷ்டா தேவியின் சிலை பல்லவர் காலத்தது. சம்புவரையனான ஆளப்பிறந்தான் வைகாசியில் விழா கொண்டாட, கைக்கோளரிடம் வரிவசூலித்தார். பங்குனியில் விழா எடுக்கவும் ஏற்பாடு செய்த செய்தி, அழகிய பல்லவன் கோன்நந்தி பன்மன் (கோப் பெருஞ்சிங்கன்) நன்மைக்காக, இக்கோயிலை கற்கோயிலாகக் கட்டித் திருமணமண்டபமும், இவ்வூரில் வாழ்ந்த வில்லி திருவன் திருகாந்தராய்ன் எழுப்பினார் கி.பி.1626ல் கிராம மக்கள் 5 காணி நிலப்பரப்பில் பூந்தோட்டமும் இலுப்பைத் தோப்பும் வைக்க ஏற்பாடு செய்தனர். 1760ல் பிரமீசம் பதிற்றுப் பத்தந்தாதி எழுதிய கச்சியப்பர், ஊரின் செழிப்பை புகழ்ந்துள்ளார்.

நம்பிக்கைகள்

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

தைமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் 14 நாட்கள் நடைபெறும் அதில் 5 ஆம் நாள் திருக்கல்யாணம், 7ஆம் நாள் திருத்தேர், 9ஆம் நாள் 63 நாயன்மார்கள் திருஉலா, 10ஆம் நாள் தைப்பூசத்தீர்த்தவாரி சிறப்புற நடைபெறுகின்றன, தைப்பூசத்தன்று சேயாற்றில் காஞ்சி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 கிராமங்களில் உள்ள கடவுள் திருமூர்த்திகள் ஒன்று கூடி அருள் பாலிக்கும் திருக்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருஊரக வரதராஜ பெருமாள் (தாயார் சன்னதிகள் தனித்தனியே) கோயில் ஊரின் நடுவில் அருள்பாலிக்கிறார். வடக்கே செல்லியம்மன். தெற்கு எல்லை பாதிரியம்மன் இடையில் தேவேந்திரன், பெரியாண்டவர் வீரபவீ த்திரசுவாமி, நடுவில் மாரியம்மன், தென் கிழக்கே அங்காளம்மன், கிளரொளிஅம்மன் வடமேற்கு தர்மராஜர் கோயில் போன்ற சன்னதிகள் பலருக்கு குலதெய்வமாகவும் ஊரின் காவல் தெய்வமாகவும் விளங்குகின்றன. கணபதி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் பிரம்மீசனை வழிபட்ட தலம். ஜேஷ்டாதேவி, மகாபைரவன் ஆகிய கடவுள்களை பக்தர்கள் வழிபடும் சிறப்புத் தலம். பராசரர், பரத்வாஜர், பிருகு போன்ற முனிவர்களும் சோழஅரசனும் அணிசேகரப் பாண்டியனும் வழிபட்டு தைப்பூச நன்னாளில் இறைவனின் தரிசனம் பெற்றதாக தலபுரணம் கூறுகிறது. பிரம்மா பூஜை செய்து நலம் பெற்ற தலம். பிரம்மா தனது சிரசை கிள்ளிய பைரவ சிவனுக்கு தனிச் சன்னதி வைத்து வழிபட்ட தலம். மிகத் தொன்மை வாய்ந்த கோயில் ஜேஷ்டா தேவி வழிபாடு, பைரவ வழிபாடுக்கு உகந்த தலம். தைப்பூசத்திருநாள் விழா அன்று தமிழ்நாட்டில் இந்த ஊரில் ஏறத்தாழ 18 ஊர்களில் அருள்பாலிக்கும் கடவுள் திருமூர்த்திகள் சேயாற்றில் கூடி காட்சி தரும் புனித தலம்.

திருவிழாக்கள்

தைமாதம் பிரமோற்சவம், தைப்பூசம், மாசிமகம், பிரதோஷம், சிவராத்திரை

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெருநகர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top