Saturday Jan 18, 2025

பெரியவெண்மணி அர்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி

பெரியவெண்மணி அர்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், பெரியவெண்மணி, மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம் – 603 313. தொடர்புக்கு திரு சரவணன்-8754394029, திரு நாதன்-9943488994, திரு முருகன்-9597495716.

இறைவன்

இறைவன்: அர்ஜுனேஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ளது. சென்னை பாண்டி ECR சாலையில் செய்யூர் வந்து அங்கிருந்து மருவத்தூர் சாலையில் 8 .தூரத்தில் இவ்வூர் அடையலாம். பாண்டாவர்கள் வனவாசத்தின் போது அர்ஜுனனால் வழிபடப்பட்ட ஈசன் பெரியவெண்மணி என்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார். இதே போன்று தருமர், பீமன், நகுலன், சகாதேவன், குந்திதேவி, திரௌபதி இவார்கள் வழிபட்ட கோயில்களும் இந்த வட்டாரத்தில் இருக்கின்றன. ஆலயம் மிகவும் சிதிலமடைந்து திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. இங்கு உள்ள கணபதி பத்மாசனத்தில் அமர்ந்து, யோகா நிலையில் காட்சி கொடுப்பது அபூர்வமாக உள்ளது.. மற்றும் பார்வதி, பரமேஸ்வரன் ,தேவர், ரிஷிகள் புடைசூழ அமர்ந்து உள்ள சிற்பம் காண்போர் கண்ணை கவரும் விதமாக அமைந்துள்ளது.. மேலும் ஜேஷ்டாதேவி , ஹயக்கிரீவர் சிற்பங்களும் காணப்படுகின்றன. மூலவர் ஸ்ரீ அர்ஜுனேஸ்வரர் சதுர வடிவ பீடத்தில் கிழக்கு நோக்கிய சன்னதில் .காட்சி கொடுக்கிறார். நர்மதை பாணத்தால் ஆன லிங்கம் இரண்டு வேளை பூஜை இக்கோயிலில் தவறாமல் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு எதிரில் திருக்குளம் அமைந்துள்ளது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியவெண்மணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top