பெரியகுடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பெரியகுடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
பெரியகுடி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
சௌந்தர்யநாயகி
அறிமுகம்:
பெரியகுடி கிராமம், மன்னார்குடியின் நேர் கிழக்கில் உள்ள திருக்கொள்ளிக்காடு சாலையில் திருவண்டுறை, குன்னியூர் தாண்டி கோரையாற்றின் கரையிலே சென்று சேந்தமங்கலம் பிரிவின் நேர் இடதுபுறம் கோரையாற்று பாலம் உள்ளது அதன் வழி 1 கிமீ சென்றால் பெரியகுடி அடையலாம். மன்னார்குடியில் இருந்து 15 கிமீ தூரம் வரும். பெரியதொரு திருக்குளத்தின் மேல் கரையில் தான் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது.
சிவன் கோயில், திரௌபதி அம்மன் கோயில், ஆகியன இவ்வூரில் அமைந்துள்ளன. அகத்தியர் தென்பகுதிக்கு செல்ல பணிக்கப்பட்ட போது வழியில் பல தலங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார், அதில் ஒன்று இந்த பெரியகுடி எனப்படுகிறது, அதனால் இங்கு இறைவன் பெயர் அகத்தீஸ்வரர், இறைவியின் பெயர் சௌந்தர்யநாயகி. சிறிய கோயில் தான் கிழக்கு நோக்கியது, இறைவன் உயர்ந்த பாணன் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளார், அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், பெரிய இணைப்பு மண்டபம் ஒன்றுள்ளது.
இறைவன் கருவறை வாயிலில் சிறிய விநாயகர் ஒருவரும் மறுபுறம் இரு நாகர்களும் உள்ளனர். இதே மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கிய பைரவர் ஒருவரும் மேற்கு நோக்கிய பைரவர் ஒருவரும் உள்ளனர். இந்த முகப்பு மண்டபத்தின் மேல் இறைவன் ரிஷபாரூடராக காட்சியளிக்கிறார். வெளியில் நந்தி மண்டபம் ஒன்றும் உள்ளது. பிரகார வலமாக வரும்போது கோஷ்டங்களில் விநாயகர் தென்முகன், சிமெண்டாலான விஷ்ணு பிரம்மன் சிலைகளும் கல்திருமேனியாக துர்கையும் உள்ளனர். சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார், பார்க்க பழமையான அழகுடன் காட்சி தருகிறார். ஈஸ்வரனின் கருணையும், அகஸ்தியரின் ஆசியும் இருந்தால் மட்டுமே அகத்தியர் தலங்களை தரிசிக்கும் பாக்கியம் வாழ்நாளில் கிடைக்கும்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி