Wednesday Dec 18, 2024

பெரியகண்டியாங்குப்பம் நாகலிங்கேஸ்வரர் ஈசான்யலிங்கம் திருக்கோயில், கடலூர்

முகவரி :

பெரியகண்டியாங்குப்பம் நாகலிங்கேஸ்வரர் ஈசான்யலிங்கம் திருக்கோயில்,

பெரியகண்டியாங்குப்பம், விருத்தாசலம் வட்டம்,

கடலூர் மாவட்டம் – 606001.

இறைவன்:

நாகலிங்கேஸ்வரர்

அறிமுகம்:

விருத்தாசலத்தின் வடக்கில் நீளும் ஆலடி சாலையில் மூன்றாவது கிமீல் உள்ளது இந்த கண்டியாங்குப்பம், பெரியகண்டியாங்குப்பம், சிறியகண்டியாங்குப்பம் என இரு ஊர்கள் உள்ளன. இதில் பெரியகண்டியாங்குப்பம் எனும் ஊரில் உள்ள மாரியம்மன் கோயில்ஒட்டி அமைந்துள்ளது இந்த சிவன்கோயில். பழமலைநாதரை சுற்றி உள்ளன அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள் உள்ளன.  இவற்றில் எட்டாவதாக உள்ள பெரியகண்டியாங்குப்பம்/ஈசான்யலிங்கம் ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைவன் நாகலிங்கேஸ்வரர் இவரே ஈசான்ய லிங்க மூர்த்தியாக கருதப்படுகிறார். இறைவன் கிழக்கு நோக்கியவர், எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. வாயிலில் முருகனும் விநாயகரும் சிறிய மாடங்களில் உள்ளனர். மணிமுத்தாற்றில் காலை ஸ்நானமும், ஆழத்து பிள்ளையாரை வணங்கி பழமலைநாதரை தரிசித்து பின் இந்த அஷ்ட லிங்கதரிசனமும் ஒரே நாளில் செய்து விட்டால் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்….  

சிறப்பு அம்சங்கள்:

பழமலைநாதரை சுற்றி உள்ளன அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள். 1.பூதாமூர்/இந்திரலிங்கம் முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம். 2.பூதாமூர்/அக்னிலிங்கம் தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும். 4. ஜெயம்கொண்டம் சாலை ஏகனாயகர்/எமலிங்கம் தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும். 5.ஆலிச்சிகுடி/நிருதிலிங்கம் . இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். 6.மணவாளநல்லூர்/வருணலிங்கம் மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும். 6.எருமனூர்/வாயுலிங்கம் இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும். 7.வயலூர்/குபேரலிங்கம் இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும். 8.பெரியகண்டியாங்குப்பம்/ஈசான்யலிங்கம் ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரிய கண்டியாங்குப்பம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top