பெரம்பூர் ஜோதிர்லிங்கம் கோயில், திருவாரூர்
முகவரி :
பெரம்பூர் ஜோதிர்லிங்கம் கோயில்,
பெரம்பூர், நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614404.
இறைவன்:
ஜோதிர்லிங்கம்
அறிமுகம்:
நீடாமங்கலம்- ரிஷியூர் சாலையில் உள்ளது பெரம்பூர். இந்த ஊரில் இரண்டு சிவன்கோயில்கள் உள்ளன. ஊரின் மையத்தில் உள்ளது ஜம்புகேஸ்வரர் சிவாலயம். இக்கோயில் வடகிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் உள்ளது. இந்த பெரம்பூர் வைணவ சம்பிரதாயத்தினை கடைபிடிக்கும் சமூகத்தினர் நிறைந்த ஊர். காஞ்சியில் பிறந்த மகான் ஸ்ரீ போதேந்திர சுவாமிகள் வாழ்ந்த திருத்தலம். இக்கோயில் போதேந்திர சுவாமிகளால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது என கூறுகிறார் கோயில் அர்ச்சகர். ஒற்றை கருவறை கோயில். இறைவன் கிழக்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார். இறைவன்-ஜோதிர்லிங்கம் இறைவி-பெயர் தெரியவில்லை இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார், இறைவி அந்த கருவறையிலேயே தெற்கு நோக்கி உள்ளார். முகப்பில் நீண்ட தகர கொட்டகை உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார். கோயிலின் தென்புறம் பெரிய குளம் உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரம்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி