பெரம்பலூர் கைலாசநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
பெரம்பலூர் கைலாசநாதர் சிவன்கோயில்,
பெரம்பலூர், விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606003.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
கல்யாணசுந்தரி
அறிமுகம்:
திருச்சி – உளுந்தூர்பேட்டை சாலையில் பெரம்பலூர் என ஒரு மாவட்டமே உள்ளது. அதல்ல இது, விருத்தாசலம் மேற்கில் தொரவலூர் தாண்டி எட்டாவது கிமீ-ல் எடையூர் சாலை இடதுபுறம் திரும்புகிறது அதில் இரண்டு கிமீ தூரம் சென்றால் கொடுக்கூரை அடுத்து உள்ளது இந்த பெரம்பலூர். பெரியதொரு ஏரியின் கரையில் அமைந்துள்ள பழமையான கிராமம், பிரதான நெடுஞ்சாலையில் இருந்து விலகி இயற்கை எழிலுடன் அமைதியாக உள்ளது. ஊரின் முகப்பில் ஏரியின் கரையில் கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக அமைந்துள்ளது இந்த சிவன்கோயில். அதனை ஒட்டி ஒரு ஐயனார் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. பழம் கோயில் சிதைவடைத்து இருக்கலாம், இப்போது நாம் காண்பது புதிய அழகிய கோயில்.
இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், அவரது இடப்புறம் அம்பிகை கல்யாணசுந்தரியும் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டு உள்ளார். இதனை கல்யாண கோலம் என்பர் அதனால் தான் அம்பிகையின் பெயர் இங்கு கல்யாண சுந்தரி. திருமணம் விரைவில் கைகூட இந்த அம்பிகையை வேண்டலாம். கைலாசநாதர் என்றாலே ஆயிரம் வருட பழமை கொண்டதாக இருக்கும். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி அவரது முன்னம் ஒரு அழகிய நந்தி உள்ளது அம்பிகையின் முன்னர் ஒரு சிறிய சிங்கவாகனம் அமைக்கப்பட்டு உள்ளது, இரு கருவறைகளின் முகப்பை இணைக்கும் வண்ணம் நீண்ட மண்டபம் ஒன்றினை கட்டியுள்ளனர். அதன் முகப்பில் இறைவன் இறைவி விநாயகர் முருகன் குடும்பமாக அமர்ந்துள்ளனர்.
கருவறை சுற்றில் தென்முகன் மட்டும் உள்ளார் ஒரு தனி மாடத்தில் அமைத்துள்ளனர். வேறு கோட்ட தெய்வங்கள் ஏதுமில்லை. சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார் இறைவன் அபிஷேக தீர்த்தம் வெளிவரும் வழியை அழகிய கோமுகம் போன்றே அமைத்து உள்ளனர். பிரகார சிற்றாலயங்கள் விநாயகருக்கும் முருகனுக்கும் அமைந்துள்ளன. முருகன் அழகிய பன்னிருகை வேலனாக காட்சி தருகிறார். வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன. பைரவர், சூரியன் ஆகியோருக்கும் மாடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்கோயில் பூசாரி ஒருவரால் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரம்பலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி