பூந்தோட்டம் யோக முத்துமாரி அம்மன் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
பூந்தோட்டம் யோக முத்துமாரி அம்மன் திருக்கோயில்,
பூந்தோட்டம்,
திருவாரூர் மாவட்டம்
இறைவி:
யோக முத்துமாரி அம்மன்
அறிமுகம்:
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது பூந்தோட்டம் என்னும் கிராமம். இங்கு அன்னை யோக முத்துமாரி அம்மன் என்னும் திருநாமத்தில் வீற்றிருக்கிறாள். ஆலங்குடியிலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
கடும் தவமிருந்து இறைவனிடம் பல வரங்களையும் அதிக பலத்தையும் பெற்றவன் மாராசுரன் என்ற அரக்கன். வரம் பெற்றதன் காரணமாக அவர் ஆணவமும் அகங்காரமும் கொண்டு மூவுலகையும் துன்புறுத்தினார்கள். அமைதியற்ற மக்கள் பராசக்தியிடம் சென்று முறையிட்டார்கள். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தி கோபத்துடன் பூலோகம் வந்தாள். பின்பு அரக்கனின் இரண்டு கால்களையும் பிடித்து மேலே தூக்கி வந்து தலையை பூமியில் அழுத்தி வதம் செய்தாள்.
பூந்தோட்டம் தளத்தில் அவள் சிறிய கோயிலில் அருள்பாலிக்கிறாள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பகுதி சிறிய கிராமமாக இருந்தது. இங்கு இருந்தவை எல்லாம் தென்னங்கீற்றும் வைக்கோல் வேய்ந்த குடிசை வீடுகள். இப்பகுதியில் வசித்த மக்கள் யாருக்காவது சிறு உடல் நல பாதிப்புகள் என்றாலும் வைத்தியரை தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட அவர்கள் தங்களை காக்க யாரும் இல்லையே என வருந்திய போது தான் இங்கு வரமாக வந்த அமர்ந்தால் முத்துமாரியம்மன்.
அன்னையை வழிபட ஆரம்பத்திலிருந்து கிராமத்திற்கு ஆரோக்கிய பிரச்சனைகள் பலவும் தீர்ந்தது. பணம் வந்து சேர்ந்தது. நல்ல வேலை கிடைத்தது. கையில் பணம் புழங்கியது. அவர்களது பொருளாதார வசதிகள், குடிசைகள் எல்லாம் ஓட்டு வீடுகளாகவும், மாடி வீடுகளாகவும் மாறின. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களை தீராத் துயரம் எதுவும் தாக்குவது இல்லை. தங்களை நல் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் மாரியம்மன் தான் என்று மக்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வத்துடன் வாழ வைத்ததால் இந்த அன்னை யோக முத்துமாரியம்மன் என்ற பெயரால் அழைக்கிறார்கள். கோயில் முகப்பு மண்டபத்தின் மேல் மாரியம்மனின் சுதை சிற்பமாக அமைந்து ஊர் மக்களை தன் கூர்மையான பார்வையால் காக்கிறாள். அடுத்து நீண்ட மகா மண்டபத்தில் உற்சவர் மற்றும் பரிவார தெய்வங்கள், வீதிஉலா செல்வதற்காக பல்லக்கு மற்றும் நகரும் தேர் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரகாரத்தில் கிராம தெய்வமான பெரியாச்சி மற்றும் வீரன் ஆகியோருக்கு தனி சன்னதிகள். கருவறையில் விநாயகர் நாகர் சூழ நடுவில் அமர்ந்து காட்சி தருகிறாள் யோக முத்துமாரியம்மன்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூந்தோட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி