புளிச்சிகுளம் காலசாமி (எமதர்மராஜன்) கோயில், தென்காசி
முகவரி :
புளிச்சிகுளம் காலசாமி (எமதர்மராஜன்) கோயில்,
புளிச்சிகுளம்
தென்காசி மாவட்டம் – 627814.
இறைவன்:
காலசாமி (எமதர்மராஜன்)
அறிமுகம்:
தர்மத்தின் தலைவனாக நின்று அறநெறி தவறாமல் செயல்படும் எமதர்மனுக்கு மிக சொற்பமாகவே சொற்பமாகவே கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக தென்காசி மாவட்டம் மத்தளம்பாறைக்கு அருகில் புளிச்சிகுளம் என்ற கிராமத்தில் தர்ம தேவனுக்கு தனி கோயில் ஒன்று இருக்கிறது. தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் மத்தளம்பாறை கிராமத்திலிருந்து புல்லுக்காட்டுவலசை செல்லும் சாலையில் புளிச்சிகுளம் இடத்தில் கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பழமையான இந்த கோயிலில் முதலில் எருமை வாகனத்தில் வீற்றிருந்த வடிவில் காட்சி அளித்தபோது எமதர்மனின் உக்கிரம் தாங்க முடியவில்லையாம். எனவே கோயில் கொடை விழாவின் போது சேவலை பலி இட்டு வழிபட்டு வந்திருக்கிறார்கள். பின்னர் அவரை 2015ஆம் ஆண்டு காலை வாகனத்திற்கு மாற்றி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்கள். அதுமுதல் எமதர்மனை காலசாமி என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
அவரவர் காலத்தை நிர்ணயிப்பவர் ஆக கால தேவனாக விளங்கும் இவருக்கு காலசாமி என்ற பெயரை சூட்டியுள்ளனர். இப்போது சைவ வழிபாடு இங்கு நடைபெறுகிறது. இந்தக் கோயிலுக்கு பக்கத்து தெருவில் எமதர்மனின் ஆயுதங்களான வேல் மற்றும் சூலாயுதத்திற்க்கு தனி சன்னதி உள்ளது. அங்கே முதலில் வழிபாடு பன்ன பிறகுதான் காலசாமியின் சன்னதிகள் பூஜைகள் நடக்கின்றன. மூலவராக சாமியின் வலது கையில் சாட்டையும் வலது தோளின் மீது களை எடுக்கும் பாசக்கயிறு . தொழிலுக்கு ஆயத்தமான நிலையில் அவரது தோற்றம் உள்ளது. முன்மண்டபத்தில் திரிசூலம் இருக்கிறது. மூலவருக்கு பூஜை நடக்கும்போது இதற்கும் பூஜை நடக்கிறது.
நம்பிக்கைகள்:
தர்மம் தவறாமல் செயலாற்றுபவர் காலசாமி ஆன எமதர்மன் அதனால தர்ம காரியங்களில் பாதிக்கப்படுபவர்கள் இந்த கால சாமியை வழிபட்டு பலனடைகிறார்கள் தடைபடும் நல்ல காரியங்கள் கைக்கூடும் நோயுற்றவர்கள் உடல் நலம் பெறவும் மரண பயம் நீங்கி துணிவான வாழ்க்கை எதிர்கொள்ளவும் கஷ்டங்கள் நீங்கவும் இந்த கால சுவாமியை வழிபடுகின்றனர்
திருவிழாக்கள்:
ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பொங்கல் விழா விசேஷ பூஜையுடன் கொண்டாடப்படும். சித்திரை மாதம் 4 வெள்ளிக்கிழமைகள் வந்தால் மூன்றாவது வெள்ளிக் கிழமையும் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வந்தால் நான்காவது வெள்ளிக்கிழமையும் ஆண்டு கொடை விழா கொண்டாடப்படும். அன்று குற்றாலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை 9 மணி அளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கண்திறக்கும் வைபவம் நடைபெறும். பின்னர் பொங்கல் பாயசம் படைத்து விசேஷ பூஜை அதை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். இரவு 8 மணிக்கு கோயிலில் வில்லுப்பாட்டு தொடங்க பக்கத்து கிராமத்திற்கு ஊர்வலமாக சென்று காணிக்கை பெற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவர்கள் கோயிலை அடைய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அதை தொடர்ந்து அடுத்த நாளான சனிக்கிழமை காலை 5 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று விழா இனிதே நிறைவு பெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புளிச்சிகுளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை