புலியூர் ஸ்ரீ மகாதேவர் சிவன்கோயில் காஞ்சிபுரம்
முகவரி
புலியூர் ஸ்ரீ மகாதேவர் சிவன்கோயில், புலியூர் , உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ மகாதேவர்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் தாலுகாவில் அமைந்துள்ளது இந்த புலியூர் கிராமம். காஞ்சிபுரம்- அச்சரப்பாக்கம் பேருந்து இங்கு வருகிறது. உத்திரமேருரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்றூ புலியூர் சிவலிங்கம். மிகவும் பழமையான சிவலிங்கம். இங்கு சிவலிங்கம் நந்தி மட்டுமே வெட்ட வெளியில் உள்ளது. திருநாமம் ஸ்ரீ மகாதேவர். பெரிய பாண வடிவம். பூஜைகள் இரு வேளை நடைபெறுகிறது. திரு பூராசாசாமியார்-9444325304, திரு ஏழுமலை 9789769939.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
உத்திரமேரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை