Wednesday Dec 25, 2024

புலியகுளம் லோக நாயக சனி ஈஸ்வர பகவான் திருக்கோயில், கோயம்பத்தூர்

முகவரி

புலியகுளம் லோக நாயக சனி ஈஸ்வர பகவான் திருக்கோயில், புலியகுளம் சாலை, புலியகுளம், கோயம்பத்தூர் மாவட்டம் – 641045.

இறைவன்

இறைவன்: லோக நாயக சனி ஈஸ்வர பகவான்

அறிமுகம்

லோக நாயக சனீசுவரன் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் சனீசுவரனை மூலவராக கொண்ட கோவிலாகும். இத்தலத்தில் சனீசுவரனும், அவருடைய வாகனுமான காகமும் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் இரும்பினால் ஆன சிலையாக உள்ளன. இத்திருவுருவ சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் வடிவமைக்கப்பட்டதாலேயே இங்கு லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்ற பெயர் வரக் காரணமாகும். ஈரேழு பதினான்கு லோகதில் வாழும் எவ்வகை குலத்தாராயினும் சனியின் பார்வைபடாமல் வாழ முடியாது. ஆகையனால் இவருக்கு லோகநாகயன் என்றும் உலோகத்தில் உருவேற்றப்பட்டதால் உலோகநாகயன் என்றும் பொதுவாக லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று கூறப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

சனி பகவானுக்கு இங்கு லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று பெயர் காரணம், சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் வடிவமைக்கப்பட்டது, வாகனமான காகமும் இரும்பினால் ஆனது. ஈரேழு பதினான்கு லோகதில் வாழும் எவ்வகை குலத்தாராயினும் சனியின் பார்வைபடாமல் வாழ முடியாது. ஆகையனால் இவருக்கு லோகநாகயன் என்றும் உலோகத்தில் உருவேற்றப்பட்டதால் உலோகநாகயன் என்றும் பொதுவாக லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று கூறப்படுகிறது. சனிபகவானின் விக்ரகம் தனது உலோகமான எஃகு இரும்பினால் காணப்படுவது உலகினில் இங்கு மட்டும்தான்.

திருவிழாக்கள்

வாரம் முழுக்க அலங்காரங்களுடன் மூலவருக்கு வழிபாடு நடத்தப்பட்டாலும், சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று உச்சிப் பொழுதில் சிறப்பு அபிசேகம், ஆராத்தி, அர்சனை நடத்தப்படுகிறது. மேலும், பக்தர்கள் தாங்களாகவே அபிசேகமும், ஆராத்தியும் செய்யும் வகையில் திறந்த வெளியிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புலியகுளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top