புலிப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
புலிப்பாக்கம் சிவன்கோயில், புலிப்பாக்கம், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 107.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த புலிப்பாக்கம் கிராமம். செங்கல்பட்டு உத்திரமேரூர் சாலையில் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் உள்ள கிளை சாலையில் உள்ளது புலிப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தின் நடுவில் வீடுகளுக்கு இடையில் மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகிறது இந்த சிவாலயம். கோபுரம் இல்லை. கூரை இல்லை. கட்டிடம் இல்லை. இருப்பது எல்லாம் ஈசனின் லிங்க வடிவம். மற்றும் துர்கை, சூரியன், நந்தி. எல்லாம் வெட்ட வெளியில் உள்ளது. அருகில் திருக்குளம் காணப்படுகிறது. எங்கும் கருங்கல் தூண்கள், மற்றும் கற்கள். பூஜை செய்வோர் யாரும் இல்லை. தொடர்புக்கு திரு தாமோதரன் 9626642494.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புலிப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
உத்திரமேரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை