புரிசை அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி
புரிசை அகத்தீஸ்வரர் திருக்கோயில், புரிசை, அனக்காவூர் (வழி), செய்யாறு வட்டம் – 604401. திருவண்ணாமலை மாவட்டம் – 604401.
இறைவன்
இறைவன்: அகத்தீசுவரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
‘புரிசை’ என்னும் பெயரில் இரண்டு ஊர்கள் உள்ளன. 1. வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் இடையில் உளளது. 2. தக்கோலம் அருகில் உள்ளது. சுந்தரர், தம் தேவாரத்துள் கூறும் பொன்னூர் நாட்டுப் பொன்னூர், இவ்வூருக்கு அருகில் இருப்பதாலும், புரிசை நாட்டுப் புரிசை என்று, பொன்னூரை அடுத்துப் புரிசையைச் சுந்தரர் குறிப்பிடுவதாலும், முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வந்தவாசியை அடுத்துள்ள புரிசையே வைப்புத் தலமாகும். இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். செய்யாறு – வந்தவாசி சாலை வழியில் செய்யாற்றில் இருந்து தென் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புரிசை அமைந்துள்ளது. தமிழ் நாடு வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் மத்தியில் உள்ளது. சாலையில் ‘புரிசை’ என்ற பெயர்ப் பலகையுள்ள இடத்தில் திரும்பி ஊருள் விசாரித்து செல்ல வேண்டும். சுவாமியை தரிசிக்க உள்ள சாளரத்தின் உட்புறத்தில் அகத்தியர் வழிபடும் சிற்பம் உள்ளது. கருவறையின் வெளிப்புறத்தில் – மகாமண்டபச் சுவரில் நாயன்மார்களின் வரலாற்றுச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மேலும் காமதகனம், இராவணன் கயிலையை எடுப்பது போன்ற புராணச் சிற்பங்களும், சிவமூர்த்தங்களும் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புரிசை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை / பாண்டிச்சேரி