புதுக்குடி சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
புதுக்குடி சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், புதுக்குடி – அஞ்சல், எரவாஞ்சேரி (வழி), குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612602.
இறைவன்
இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி
அறிமுகம்
புதுக்குடி சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். கும்பகோணம்-எரவாஞ்சேரி சாலையில், எரவாஞ்சேரிக்கு முன்பாக புதுக்குடி உள்ளது. புதுக்குடி என்னும் பெயரில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மற்றொரு ஊர் உள்ளதால் இவ்வூரை பதினெட்டு புதுக்குடி என்றழைக்கின்றனர். இங்குள்ள இறைவன் சுவேதாரண்யேஸ்வரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். இடது புறத்தில் இறைவி உள்ளார். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலமாகும். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகல், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோர் முன்னிலையில் 1990-ல் (டிசம்பர் 12) கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயில் சிறியது. பிராகாரத்தில் ஒருபுறம் நான்கு சிவலிங்கங்கள் வரிசையாகவுள்ளன. நடராசர் சபை தனிச் சந்நிதியாக உள்ளது. மண்டபத்தின் இடப்புறத்தில் நால்வர், ஆதிசங்கரர் சந்நிதிகள் உள்ளன. திருச்சுற்றில் சுப்பிரமணியர், பைரவர், சூரியன், விநாயகருக்கான சன்னதிகள் உள்ளன. துக்காச்சி என்னும் ஊரிலிருந்து குருக்கள் வந்து பூஜை செய்கிறார். திருவாதிரை, அன்னாபிஷேகம் முதலிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி