Saturday Nov 23, 2024

புஞ்சையூர் ஆலகால பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

புஞ்சையூர் ஆலகால பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில்,

புஞ்சையூர், திருத்துறைபூண்டி வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610203.

இறைவன்:

ஆலகால பஞ்சநதீஸ்வரர்

இறைவி:

சுகந்த குந்தளாம்பிகை

அறிமுகம்:

புஞ்சையூர்; திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் இருபது கிமீ தூரம் வந்தவுடன் அரிச்சந்திரா நதியை தாண்டி வலதுபுறம் திரும்பி அதன் தென் கரையில் மேற்கு நோக்கி ஆறு கிமீ தூரம் கரையிலேயே சென்றால் ஆற்றின் கரையில் புஞ்சையூர் விலக்கு, இங்கிருந்து தெற்கு நோக்கியபடி ஒரு கிமீ தூரம் சென்றால் புஞ்சையூர் உள்ளது. இவ்வூர் பூசலாங்குடி ஊராட்சியைச் சேர்ந்ததால் பூசலாங்குடி புஞ்சையூர் என்கின்றனர். இங்கு ஊரின் முகப்பிலேயே பெரியதொரு குளத்தின் கீழ்கரையில் மேற்கு நோக்கிய சிவன் கோயிலாக அமைந்துள்ளது, இதன் ஊர் புஞ்சையூர் என சொல்லப்பட்டாலும் கோயில் அருகில் ஆலிவலம் என பெயர் பலகை உள்ளது பலரை குழப்பவே செய்யும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான நான்காம் நூற்றாண்டின் சோடசலிங்கம் பெரிய அளவில் மூலவராக உள்ளார். பதினாறு பட்டைகள் கொண்ட இறைவன் – ஆலகால பஞ்சநதீஸ்வரர் ஆலகாலம் எனும் ஊரில் இருந்த பஞ்சநதீஸ்வரர் என்பதால் இந்த பெயர், தற்போது ஊர் ஆலிவலம் என மாறியுள்ளது. இறைவி – சுகந்த குந்தளாம்பிகை இறைவன் மேற்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். பழம்கோயில் இன்று காணப்பெறவில்லை தற்போதைய கோயிலை உள்ளூர் KTK பண்ணையை சேர்ந்தவர்கள் கேரளா பாணியில் கட்டியது என்கின்றனர். 1988ல் இக்கோயில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு பலகை ஒன்றுள்ளது.

கோயில் கட்டுமானம் சரியாக செதுக்கப்படாத கருங்கல் கொண்டு கட்டப்பட்டு நாற்புறமும் சரிந்த பிரமிட் போல கட்டப்பட்டு மேலே கலசம் வைக்கப்பட்டுள்ளது. முகப்பு மண்டபத்தில் வடக்கு நோக்கிய ஒரு விநாயகர் உள்ளர். இறைவன் எதிரில் ஒரு மேடையில் நந்தி பலிபீடம் உள்ளது நந்தி மண்டபத்தின் மேல் மணி வைப்பதற்காக ஒரு மண்டபம் போன்று எழுப்பி உள்ளனர். கருவறை சுற்றி மூன்று புறமும் மாடங்கள் உள்ளன. அதில் துர்க்கை தென்முகன் இருவரும் உள்ளனர். சண்டேசர் பைரவர் தனி சன்னதியில் உள்ளனர். சண்டேசர் பாதம் மேல் நோக்கிய நிலையில் உள்ளது அதன் பழமையை காட்டுகிறது. ஒரு கால பூஜையில் கோயில் உள்ளது என இ.ச துறை போர்டு தெரிவித்தாலும் KTK பண்ணையின் செலவில் அர்ச்சகர் நிவேதனம் மின்கட்டணம் ஆகியவைகள் தரப்படுகிறது என அறிந்தேன். இந்த கோயில் மட்டுமல்லாமல் ஆலிவலம் ஊருக்குள் இருக்கும் கோயிலும் இவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான இறைவனை காண்பதே பாக்கியம்.

காலம்

1100 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புஞ்சையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top