பீதர் ஜல நரசிம்ம சுவாமி கோவில், கர்நாடகா
முகவரி
பீதர் ஜல நரசிம்ம சுவாமி கோவில், மல்கபூர் சாலை, மங்கல்பேட்டை, பீதர் – 585401, கர்நாடகா தொலைபேசி: 098862 13492
இறைவன்
இறைவன்: நரசிம்மன் இறைவி: லக்ஷ்மி
அறிமுகம்
நரசிம்ம ஜரனி என்பது கர்நாடகா மாநிலம் பீதர் அருகே உள்ள ஒரு குகைக் கோயிலாகும். இது நரசிம்மருக்கு அமைக்கப்பட்ட கோயிலாகும். இந்த தொன்மையான கோயில் நகரிலிருந்து சுமார் 4.8 கிமீ தொலைவில் உள்ளது. இது 300 மீட்டர் நீண்ட குகையில் அமைந்துள்ளது. இது மனிச்சூலா மலைத்தொடரின் கீழ் உள்ளது. 300 அடி நீளமுள்ள குகையில் மார்பளவு தண்ணீரிணீல் நடந்து சென்றால் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்கலாம். இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர்ணீவந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரிணீல் பல மூலிகை சக்திகள் இருக்கிறது. குகையின் முடிவில் சிவ லிங்கமும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றியவர்.
புராண முக்கியத்துவம்
குகைக்கோயிலானது ஒரு நீண்ட சுரங்கம் போன்ற குகையில் அமைந்துள்ளது. இக்குகைச் சுரங்கமானது பல நூறு அடிகள் நீண்டு உள்ளது. மேலும் குகைச் சுரங்கத்தில் நான்கு அடி உயரத்திலிருந்து ஐந்து அடி உயரம் வரை தண்ணீர் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் மார்புவரை உள்ள இந்த நீரில் நடந்துதான் செல்லவேண்டும். இது அதிசயமான கட்டடக்கலையைக் கொண்டதாக உள்ளது. இந்த அதிச சுரங்கப்பாதையின் முடிவில் அமைந்துள்ள குகைச் சுவரில் நரசிம்மரின் உருவத்தைக் காணலாம். குகையின் விதானமானது எந்தவித கட்டுமானமுமின்றி குகையின் இறுதிவரை தொடர்கிறது இதுவரை இதனால் யாராலும் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. மக்கள் கோவிந்தா கோவிந்தா மற்றும் நரசிம்மா ஹரி ஹரி ஆகிய உச்சாடங்களை பக்தியுடன் கூறிக்கொண்டு செல்கின்றனர். குகைக் கோவிலின் முடிவில் இரண்டு தெய்வங்கள் உள்ளன அவை – நரசிம்மர் மற்றும் (ஜலாசுரன் வழிபட்ட சிவ லிங்கம் ஆகும். குகையின் முடிவில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய எட்டு பேர் நின்று தரிசிக்க இயலுமளவுக்கே சிறியதாக இடம் உள்ளது. தரிசனத்துக்கு சென்றவர்கள் திரும்பும்வரை மற்ற பக்தர்கள் குகை வழியில் உள்ள நீரில் நின்றபடி காத்திருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றானது தொடர்ந்து பாய்கிறது. மக்கள் தொடர்ந்து அதில் நடக்கின்றதால், நீர் தெளிவாக இல்லை. பக்தர்கள் தங்கள் குழந்தைகளை நீரில் மூழ்காமல் பாதுகாக்க தங்கள் தோளில் சுமந்து கோயிலுக்குள் செல்கின்றனர். இந்த நீரில் சல்பர் உள்ளது, இதனால் தோல் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கான பண்புகள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குகைக் கோயிலுக்கு எதிரே சற்று தாழ்வான இடத்தில் ஒரு சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்துக்கு குகையில் இருந்து வெளியேறும் ஊற்று நீர் வந்து சேருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் மிகுதியாக வருகின்றனர். விதுரா இங்கு வாழ்ந்ததாக பாரம்பரிய கதைகள் வெளிப்படுத்துகின்றன; எனவே இந்த இடம் முன்பு விதுரநகரம் என்றும், நள மற்றும் தமயந்தி (விதர்பாவின் ராஜா பீமாவின் மகள்) ஒருவருக்கொருவர் சந்தித்த இடம் என்றும் அழைக்கப்பட்டது. நகரத்தின் பதிவுசெய்யப்பட்ட வரலாறு கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு செல்கிறது. அது மெளரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோது. மெளரியர்கள், சதவாஹனர்கள், கடம்பர்கள் மற்றும் பாதாமியின் சாளுக்கியர்கள் பின்னர் ராஷ்டிரகூடர்கள் பீதர் பிரதேசத்தை ஆட்சி செய்தனர்.
நம்பிக்கைகள்
குகையின் முடிவில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய எட்டு பேர் நின்று தரிசிக்க இயலுமளவுக்கே சிறியதாக இடம் உள்ளது. தரிசனத்துக்கு சென்றவர்கள் திரும்பும்வரை மற்ற பக்தர்கள் குகை வழியில் உள்ள நீரில் நின்றபடி காத்திருக்க வேண்டும். இந்த நீரில் சல்பர் உள்ளது, இதனால் தோல் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கான பண்புகள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
விஷ்ணுவின் நான்காவது அவதாரமும் இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மர், சிவனின் ஒரு பக்தரான ஜரசாசூரன் (ஜலசூரன்) என்ற பெயரைக் கொண்ட மற்றொரு அசுரனைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. ஜரசாசூரன் தனது உயிர் பிரியும் நேரத்தில் விஷ்ணுவிடம் (நரசிம்மரிடம்) தான் வசித்து வந்த குகைக்குள் வந்து, பக்தர்களுக்கு வரங்களை அளிக்க வேண்டினான். அவனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற நரசிம்மர் குகைக்குள் வந்தார்.[4] குகையின் கல் சுவரில் நரசிம்மரின் புடைப்புத் தோற்றம் உள்ளது. கொல்லப்பட்ட அசுரன் பின்னர், தண்ணீராக மாறி நரசிம்மரின் பாதங்களில் ஓட்ட ஆரம்பித்தான் என்று நம்புகின்றனர். அதன் பின்னர் குகையில் ஊற்றாக உள்ள நீர் ஓட்டம் தொடர்ந்தது. கோடைக் காலத்திலும் வறண்டு போகவில்லை.
திருவிழாக்கள்
நரசிம்ம ஜெயந்தி
காலம்
3 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பீதர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பீதர்
அருகிலுள்ள விமான நிலையம்
பெகும்பேட்டை