பிள்ளைபெருமாள் நல்லூர் அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
பிள்ளைபெருமாள் நல்லூர் அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில்,
பிள்ளைபெருமாள் நல்லூர், தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609311.
இறைவன்:
அபிமுக்தீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
திருக்கடையூர்- திருக்கடையூர்மயானம் – பிள்ளை பெருமாள் நல்லூர் என வரவேண்டும் திருக்கடையூரின் கிழக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது. பிள்ளைபெருமாள் நல்லூர் என்பது திருக்கடையூர் மயானத்தையே குறிக்கும் ஆனால் இவ்வூர் அதனின்றும் கிழக்கில் உள்ளது இக்கோயில் பழமையான சோழர் கால கட்டுமான அங்கங்களுடன் பிரஸ்தரம் வரை கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இந்த அதிட்டானத்தில் பல கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் என தொடங்கும் கல்வெட்டு குலசேகர பாண்டியனுக்கான அடைமொழி என்பதால் இது பாண்டியர் திருப்பணி என்பதா அல்லது ராஜேந்திர சோழ என சில வரிகள் வருகின்றன விருதராஜ பயங்கர வளநாட்டு எனும் குலோத்துங்கன் பெயரும் வருவதால் இதன் தகவலை கணிக்கமுடியவில்லை. மிகவும் சிதிலமான இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது, அம்பிகை கோட்டம், விநாயகர் மற்றும் முருகன் சிற்றாலயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இறைவன் அபிமுக்தீஸ்வரர், அம்பிகையின் பெயர் அகிலாண்டேஸ்வரி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிள்ளைபெருமாள் நல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி