பின்னவாசல் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பின்னவாசல் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
பின்னவாசல், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
அறிமுகம்:
புன்னை மரங்களடர்ந்த வழி புன்னை வாயில் என அழைக்கப்பட்டது, காலப்போக்கில் பின்னவாசல் ஆகியுள்ளது. திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் கிமீ தூரத்தில் உளது இந்த சாலையோர கிராமம். திருக்காரவாசலுக்கு சற்று முன்னதாக உள்ளது. இங்கு சிவன், பெருமாள் என இரு கோயில்கள் உள்ளன. இரண்டும் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. அகத்தியர் வழிபட்ட லிங்கமூர்த்தி என்பதால் அகத்தீஸ்வரர் என பெயர் கொண்டுள்ளார். கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறையாக இறைவனுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அதிலேயே அம்பிகையும் தெற்கு நோக்கி உள்ளார் என நினைக்கிறேன். உள்ளே சென்று காண இயலவில்லை.
முகப்பில் நீண்ட தகர கொட்டகை கட்டப்பட்டுள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகன் வடக்கில் துர்க்கையும் உள்ளனர். சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் மேற்கு நோக்கிய பைரவர் சன்னதி உள்ளது. தென்புறம் வெளியை ஒட்டிய மரத்தடியில் ஒரு விநாயகரும் லிங்க பாணன் ஒன்றும் உள்ளது. அதற்க்கு ஒரு சிறிய சன்னதி எழுப்பி இருக்கலாம் அல்லது கருவறை வாயிலில் வைத்திருக்கலாம். காலச்சக்கரத்தில் நிலைமாறிய பல கோயில்களில் இதுவும் ஒன்று.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பின்னவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி