பாமந்தூர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பாமந்தூர் சிவன்கோயில்,
பாமந்தூர், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610201.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
பாமந்தூர் எனும் ஊர் கச்சனம் நிறுத்தத்தில் இருந்து மேற்கில் செல்லும் சிறிய சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் உள்ளது, இதன் முந்தைய பெயர் பாம்பு புகுந்த நல்லூர் என்பதாகும்; ஊரின் வடபகுதியில் சிவன்கோயில் மாரியம்மன் கோயில், என அனைத்து கோயில்களும் ஒன்றாக பெரிய திடல்பரப்பில் உள்ளன. பெரிய குளம் ஒன்றின் கரையில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் சிறியதாக உள்ளது இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் கருவறை கொண்டு உள்ளனர். கோயில் முகப்பு வாயிலில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். இறைவனை நோக்கிய நந்தி உள்ளார். பின்புறம் பலிபீடமும் உள்ளது. கருவறை கோட்டங்கள் என எதுவும் இல்லை, தென்மேற்கில் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சகிதமாக கோயில் கொண்டுள்ளார். வடபுறம் துர்க்கை தனி மாடத்தில் உள்ளார். அருகில் தனித்து சண்டேசர் ஒரு மாடம் போன்ற சன்னதியில் உள்ளார். கோயில் ஒரு கால பூஜையில் தான் உள்ளது என நினைக்கிறேன்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாமந்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி