Thursday Dec 26, 2024

பாக் புத்த குடைவரைக் கோயில், மத்தியப் பிரதேசம்

முகவரி

பாக் புத்த குடைவரைக் கோயில், பாக் குகை சாலை, நைங்கான், தார், மத்தியப் பிரதேசம் – 454221 தொலைபேசி: +91 78282 28507

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

பாக் குகைகள் அல்லது புலிக் குகைகள் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் தார் மாவட்டத்தின் பாக் என்ற ஊரில் அமைந்த ஒன்பது குடைவரை நினைவுச் சின்னங்கள் ஆகும். குடைவரைக் கட்டிடக் கலையில் அமைந்த இக்குகைகளில் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் கொண்டுள்ளது. தற்போது ஐந்து குகைகள் மட்டும் உள்ளது. மணற்கல் பாறைகளில் செதுக்கப்பட்ட இக்குகைச் சுவர்களில் அஜந்தா குகை ஓவியங்கள் போன்ற பௌத்த சமயம் குறித்தான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஐந்து குகைகளில் பிக்குகள் தங்க விகாரங்களும், தியானிக்க சைத்தியங்களும் உள்ளது. குகை எண் 4ன் சுவர்கள் வண்ண வண்ண ஓவியங்கள் கொண்டுள்ளதால் இக்குகையை வண்ண அரண்மனை (ரங்க் மகால்) என அழைக்கிறார்கள். இக்குகைகள் சாதவாகன மன்னர்கள் கிபி 5 – 6வது நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டதாகும். வட மொழியில் பாக் என்பதற்கு புலி என்று பொருளாகும். பாக் குகைகள், இந்தூர் தொடருந்து நிலையத்திலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ளது. இவை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கிரிகா என்று அழைக்கப்படுவது முதல் குகை. அது குகையின் தலைமை பூசாரி வசிக்கும் வீடு 2. குகையில் 1 சிவலிங்கமும் த்விச்சரனும் உள்ளனர். குகை 2 இல், 3.25 மீ உயரமுள்ள புத்தர் ஒரு தாமரை பீடத்தின் மேல் நின்று இரண்டு போதிசத்வர்களுடன் ஒரு மைய உருவம் உள்ளது.

காலம்

5-6 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தார்

அருகிலுள்ள விமான நிலையம்

இந்தோர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top