Wednesday Dec 18, 2024

பாக்கம் ஆனந்தீஸ்வரர் (அந்தீஸ்வரர்) திருக்கோயில், திருவள்ளூர், சென்னை

முகவரி

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் (அந்தீஸ்வரர்) திருக்கோயில், பாக்கம் கிராமம் (சித்தேரிக்கரை), திருவள்ளூர் மாவட்டம், சென்னை போன்: +91 97900 09123, 89393 96625, 89393 13191

இறைவன்

இறைவன்: ஆனந்தீஸ்வரர் (அந்தீஸ்வரர்) இறைவி: ஆனந்தவல்லி

அறிமுகம்

அகத்தியர் தீர்த்த யாத்திரையாக தென்னாடு வந்தபோது பல சிவன்கோயில்களில் வழிபாடு செய்துள்ளர். சில இடங்களில் சிவலிங்க திருமேனியை எழுந்தருளிவித்தும் வழிபாடு செய்துள்ளார். அப்படி பெற்றதிருதலங்களில் ஒன்று சென்னை திருவள்ளுர் மாவட்டத்தில், திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராம்த்தில் சித்தேரிக்ரையில் இருக்கும் ஆனந்தீஸ்வரர் திருக்கோயில், பசுமையான இயற்கை சூழலில் இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராஜேந்திரன் சோழனால் கி.பி.1022 –ம் ஆண்டு திருப்பணி செய்யப்பெற்றதாகவும் கல்வெட்டில் செய்திகள் காணப்படுகிறது. அப்பொது இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் ஈக்காடு கோட்டத்தில் புலியூர் நாட்டில் அங்கு கலிள சதுர்வேத மங்கலம் என அழைக்கப்பெற்றதாகவும் கல்வெட்டுச் சான்று கூறுகிறது.

புராண முக்கியத்துவம்

எங்கும் காணாத கல்லால மரம் தல விருட்சம், இரு முக ருத்ராட்சம் மரமும் உள்ளது. இன்று பல ரிஷிகள், சித்தர்கள், சூட்சமாக வருவதாக உணரப்படுகிறது. பத்துகால் மகாமண்டபமும் கலை நயத்துடன் எழப்பட்டுள்ளது, இக்கோயிலில் பரிவார மூர்த்திகள் இல்லை. இக்கோயிலில் நவகிரகம் கிடையாது, பாம்புக்கு நச்சு தன்மை வரம் அளித்த இடமாகும். இதனால் ஆனந்தீசுவரர் என்ற பெயரும் இறைவனுக்கு உள்ளது. இது ஒரு வடதமிழ்நாட்டில் இருக்கும் குரு ஸ்தலம், அகத்தியர் அந்தில் இறைவனை பிரதிஷ்டை செய்ததால் இங்கு உள்ள இறைவனுக்கு அந்தீஸ்வரர் என்ற பெயரும் உள்ளது.

நம்பிக்கைகள்

திருமணம், புத்திரபாக்கியம், வேலை வீடு அமைய, மனஅமைதி அடைய, ஆனந்தம் அடைய, குழந்தைகள் கல்வி சிறக்க இங்கு உள்ள குரு பாகவனை வணங்கினால் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றனர். அனைத்து விதமான துன்பம் அகலுவதால் ஆனந்தீசுவரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து கல்லால மரத்தின் கீழே அமர்ந்துள்ள குரு தட்சிணாமூர்த்தியை தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை காசாகவோ, கற்கண்டு போன்றபொருள்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

அகத்தியரால் பிரத்திஷ்டை செய்யப்பட்ட மரகத பச்சை நிறலிங்கம், நவகிரகம் இங்கு கிடையாது, குரு பாகவனுக்கு தனி சன்னிதி உள்ளது, இது ஒரு குரு பரிகார ஸ்தலம் ஆகும்.

திருவிழாக்கள்

ஆண்டுத்தோறும் திருக்கல்யாணம், கார்த்திகை திங்களில் 108 சங்கு அபிக்ஷேகம்,மகா சிவராத்திரி, அகத்தியர் குரு நாள், பிரதோசம், வியாழன் கிழமைகளில் குரு பகவானுக்கு சிறப்பு பூசையும், பவுர்ணமி நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைப்பெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநின்றவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top