பழையனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பழையனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
பழையனூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611108.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்த வள்ளி
அறிமுகம்:
நாகையின் மேற்கில் உள்ள சிக்கல் தலத்தில் இருந்து வடக்கில் சங்கமங்கலம் எனும் ஊர் வழி 3 கிமீ தூரம் சென்றால் பழையனூர் உள்ளது. இந்த ஊரை தாண்டி பெருங்கடம்பனூர் கூட போகலாம். மகா சிவராத்திரியில் நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள 21 சிவாலயங்களை ஒரே நாளில் சிவாலய ஓட்டமாக பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள், அதில் இக்கோயிலும் ஒன்று.
பழையன் எனும் சங்ககால குறுநில மன்னனின் பெயரில் உருவாக்கப்பட்ட பகுதி இது எனப்படுகிறது. ஊரின் மத்தியில் பெரிய குளத்தின் கீழ் கரையில் ஒரு மைதானத்தில் உள்ளது இந்த சிவன்கோயில். அகத்திய மாமுனி பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிறப்புடைய இறைவன் கிழக்கு நோக்கிய திருக்கோயில். இறைவன்- அகத்தீஸ்வரர் இறைவி- ஆனந்த வள்ளி
கோயில்பெரிய சுற்றுமதில் சுவருடன் ஒரு பிரகாரம் கொண்டு விளங்குகிறது.
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும் முகப்பு மண்டபமும் அதன் முன்னர் ஒரு நந்தி மண்டபமும் கொண்டு விளங்குகிறார். அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டு தெற்கு நோக்கி உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்புறம் தக்ஷணமூர்த்தி உள்ளார். பிரகாரத்தின் மேற்கில் நீண்ட மண்டபம் உள்ளது முதலில் கற்பக விநாயகர் ஒரு சிற்றாலயத்தில் உள்ளார், அவரது மேடையில் நாகரையும் மூஞ்செலியையும் சேர்த்து வைத்துள்ளனர்??.
அடுத்து ஒரு கருங்கல் மண்டபம் ஒன்றில் விஸ்வநாதர் அம்பிகை விசாலாட்சியும், திருமேனிநாதர் எனும் லிங்கமூர்த்தியும், நீலியம்மன் எனும் அம்பிகையும் உள்ளார்கள். அடுத்து முருகன் சன்னதி உள்ளது. வடக்கில் சண்டேசர் சன்னதியும், ஒரு கிணறு ஒன்றும் உள்ளது. கருவறை சுவற்றை ஒட்டியபடி துர்க்கை சன்னதி உள்ளது. வடகிழக்கில் நீண்டதொரு மண்டபத்தில் நாகர் பைரவர் சூரியன் சந்திரன் சனி ஆகியோர் உள்ளனர். கோயில் எதிரில் காப்பாளராக உள்ள பெண்மணி கோயில் பணிகளை கவனிக்கிறார், தூய்மையாக கோயில் உள்ளது கண்டு மகிழ்ச்சி. அரசின் ஒரு கால பூஜையில் உள்ளது இக்கோயில்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பழையனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி