பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டம் அணைக்கட்டு சேரி கிராமத்தில் அழகூர அமைந்துள்ளது. பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக கருதப்படுகிறது. கோயிலில் உற்சவர் ஆகவும் மூலவராகவும் அகத்தீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாலாக ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயார் அருள்பாலித்து வருகிறார்.
கோயில் பிரகாரங்களில் உள்ள தூண்களில் பல இடங்களில் மீன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வந்து வழிபடுபவருக்கு வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
இங்குள்ள அரச மரத்தை சுற்றி வளம் வந்தும், நெய் தீபம் ஏற்றியும் பெண்கள் அம்மனை வழிபாடு செய்கின்றனர். கோயிலின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. கோயிலின் முக்கிய விழாக்களாக பிரதோஷம், பௌர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி ஆகியவை உள்ளன.
திருக்கோயிலின் நடை காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி வயலாநல்லூர் வழியாக அணைக்கட்டு சேரி கிராமத்திற்கு பேருந்து மூலம் வந்தடைந்தால் அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோயிலை தரிசனம் செய்யலாம்.