பத்தம் கைலாச நாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
பத்தம் கைலாச நாதர் சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்
இறைவன்
இறைவன்: கைலாச நாதர் இறைவி: காமாட்சி
அறிமுகம்
மங்கைநல்லூர் – திட்டச்சேரி சாலையில் 13 கிமீ. தூரத்தில் உள்ளது சங்கரன்பந்தல். இங்கிருந்து வடக்கில் ஓலக்குடி சாலையில் இரண்டு கிமீ. சென்று வலது புறம் திரும்பினால் உள்ளது பத்தம் கிராமம். பட்டம் என்ற சொல்லுக்கு நீர்வளம் செறிந்த நிலம் என பெயர். பட்டம் என்பது பத்தம் ஆகியிருக்கலாம். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைலாச நாதர் கோயில் உள்ளது. இறைவன் கைலாசநாதர் மிக பழமை வாய்ந்தவர், ஆனால் கோயில் சில வருடங்களின் முன்னம் கட்டிமுடிப்பட்ட ஒன்றாகும். இறைவன் நடுத்தர அளவிலான லிங்கமூர்த்தி, கிழக்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். இறைவி காமாட்சி தெற்கு நோக்கிய கருவறை கொண்டு அருள்பாலிக்கிறார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர் அருகில் ஒரு பெண் தெய்வ சிலை உள்ளது யாரென அறியமுடியவில்லை. கோயில் ஒருகால பூஜை மட்டும் நடைபெறுகிறது. இறைவன் இறைவி கருவறைகளை நீண்ட மண்டபம் இணைக்கிறது அந்த மண்டபத்தின் வெளியில் நந்தி தனி மண்டபத்தில் உள்ளார். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். ஊர் மக்கள் பெரிய அளவில் இக்கோயில் வருவதில்லை அதனால் கோயில் ஆங்காங்கே பழுதுற்று மரம் முளைத்து காணப்படுகிறது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி