பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி :
பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் – 607106.
இறைவன்:
சோமேஸ்வரர்
இறைவி:
அமிர்தாம்பிகை
அறிமுகம்:
கடலூரின் மேற்கில் இருபது கிமீ தூரத்தில் உள்ளது பண்ருட்டி. பிரதான நான்கு சாலை சந்திப்பில் இருந்து மேற்கில் செல்லும் அரசூர் சாலையில் நூறு மீட்டர் சென்று வலதுபுறம் செல்லும் ஜவகர் தெருவில் சென்று இடதுபுறம் திரும்பும் பொன்னுசாமி தெருவில் கடைசியில் உள்ளது இந்த சிவன்கோயில். மக்கள் சோமேசர் கோயில் என்கின்றனர். கிழக்கு நோக்கிய திருக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை கடந்தால் பெரிய வளாகத்தில் இறைவன் கிழக்குநோக்கிய கருவறை கொண்டுள்ளார் அவரின் முன்னர் முகப்பு மண்டபம் ஒன்றும் அதற்க்கு வெளியில் நந்தி மண்டபம் ஒன்றும் உள்ளன. முகப்பு மண்டபத்தின் வெளியில் இருபுறமும் விநாயகர் மற்றும் சனி பகவான் இருவரும் மாடத்தில் உள்ளனர்.
அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். சோமன் எனும் சந்திரன் வழிபட்டதால் சோமநாதர் என பெயர் கொண்டுள்ளார். இறைவன்- சோமநாதர் இறைவி- அமிர்தாம்பிகை கருவறை கோஷ்டங்களில் தக்ஷ்ணமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை என உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் சித்திவிநாயகர் தென்மேற்கு மூலையில் உள்ளார். அடுத்து ஆறுமுக சுவாமியாக மயில் மீது பன்னிரு கரங்களுடன், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். அடுத்து பாலதண்டாயுதபாணி மகாலட்சுமியும் உள்ளனர். அனைத்து சிற்றாலயங்களும் இரு தூண்கள் கொண்ட முகப்பு மண்டபத்துடன் உள்ளது.
சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். அம்பிகையின் கருவறை சுற்றி இச்சா ஞான கிரியா சக்தி தேவிகள் சுதை வடிவமாக ஆக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கில் நடராஜர் சன்னதி தெற்கு நோக்கிய முகப்பு மண்டபம் கொண்டு உள்ளது, நடராஜர் இருக்கின்றாரா என தெரியவில்லை. ராஜகோபுரத்தினை ஒட்டியவாறு சிறுசிறு மாடங்களில் சூரியன் சந்திரர்கள் உள்ளனர். சந்திர தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய திருக்கோயில். காலை நேர கோயில் திறப்பு எப்போது என கூற இயலாது, மாலை நேரத்தில் சென்றால் மட்டுமே தரிசனம் செய்ய இயலும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி