Thursday Dec 26, 2024

பண்டுதக்குடி உமாபதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

பண்டுதக்குடி உமாபதீஸ்வரர் சிவன்கோயில்,

பண்டுதக்குடி, கூத்தாநல்லூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 614101.

இறைவன்:

உமாபதீஸ்வரர்

அறிமுகம்:

கூத்தாநல்லூர் அருகில் உள்ள இந்த தலம் வாலி வழிபட்ட தலம். கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது பண்டுதக்குடி. வலதுபுறம் வெண்ணாறு –நன்னிமங்கலம் பாலம் இடதுபுறம் சிறிய தெரு திரும்பும், அதில் சென்றால் சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில். வெளியில் இருந்துபார்க்கும் போது சிறியதாக உள்ளது, உள்ளே ஒரு ஏக்கர் அளவில் பெரிய கோயிலாக உள்ளது. பிரதான வாயில் மேற்கிலேயே உள்ளது. அதன் வழி உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய சோழர்கால கருங்கல் கட்டுமானத்தில் கம்பீரமாக நிற்கிறது இறைவன் கருவறை.

கருவறை அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என பிரம்மாண்டம் காட்டுகிறது. கோயில். முகப்பு மண்டப வாயிலில் இடதுபுறம் விநாயகர் உள்ளார் அவரை கடந்து உள்ளே சென்றால் பெரிய அளவிலான லிங்க மூர்த்தியாக இறைவன் உமாபதீஸ்வரர் உள்ளார். அவரின் எதிரில் ஒரு அழகிய சிறிய நந்தி உள்ளது.. முக மண்டபத்தின் வெளியில் ஒரு நந்தி இறைவனை நோக்கி உள்ளது. இக்கோயிலின் காலகட்டம் 800ஆண்டுகளாகலாம். கருவறை கோட்டங்களில் விநாயகர் தக்ஷணமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். பிரதான தக்ஷணமூர்த்தி செப்பு கவசமிடப்பட்டு அதன்முன்னர் சிறியதாக இன்னொரு தக்ஷணமூர்த்தி உள்ளார். பழமையான சிலை பின்னமாகி இருக்கலாம். கோஷ்ட சிலைகள் அனைத்தும் அற்புதமான கைங்கர்யம். சண்டேசர் பெரியதாக அழகாக உள்ளார்.

இறைவன் கோயிலின் இடப்புறம் கிழக்கு நோக்கி அம்பிகை சன்னதி உள்ளது. இவரின் முன்னர் ஒரு முகப்பு மண்டபம் வெளியில் ஒரு நந்தி என உள்ளது. இவருக்கு ஒரு சண்டிகேஸ்வரி சன்னதி மிகவும் தள்ளி மதில் சுவற்றின் ஓரம் உள்ளது. பிரகார ஆலயங்களாக பெரிய அளவில் ராஜகணபதி உள்ளார். வடபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகன் சன்னதி உள்ளது. சிறிய மயிலொன்று எதிரில் உள்ளது. வடகிழக்கில் பெரிய பைரவர், சிறிய சூரியன் சனி உள்ளனர். இதன் அருகில் தெற்கு நோக்கிய ஒரு சன்னதியாக ஓர்மாடத்தில் அமர்ந்த கோலத்தில் பிரம்மன் சிலை ஒன்றுள்ளது இதுவும் 12 நூற்றாண்டிற்க்கான சிற்பம் தான். இதற்க்கான வரலாறு என்ன என அறியமுடியவில்லை. சிலர் இதனை வாலி என்கின்றனர். அற்புதமான தலம் மற்றும் கோயில். பெரியதாக வருமானம் என இக்கோயிலுக்கு இல்லை, எனினும் கோயில் குருக்கள் மற்றும் ஊர் மக்கள் அனைத்து விழாக்கள் மற்றும் மாதாந்திர சதூர்த்தி, பிரதோஷம் முதலியவற்றை செய்து வருகின்றனர். இங்கு நடைபெறும் விளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும்,.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பண்டுதக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top