பட்டமங்கலம் அபிமுகேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பட்டமங்கலம் அபிமுகேஸ்வரர் சிவன்கோயில்,
பட்டமங்கலம், கீழ்வேளுர் வட்டம்,
நாகை மாவட்டம் – 611104.
இறைவன்:
அபிமுகேஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
கீழ்வேளூர் – தேவூர் சாலையில் உள்ளது இந்த பட்டமங்கலம், கீவளூரில் இருந்து தெற்கில் 2 ½ கிமீ தூரத்தில் உள்ளது. ஊரின் தெற்கில் வடக்காலத்தூர் சாலையில் ஒரு கோயில் உள்ளது இதன் பெயர் அபிமுகேஸ்வரர் திருக்கோயில். கோயிலின் நேர் எதிரில் ஒரு பெரிய குளம் உள்ளது. பிரதான சாலையின் மேற்கு பக்கம் உள்ள ஒரு கோயில். இறைவன் மேற்கு நோக்கியதால் இவர் அபிமுகம் கொண்ட ஈஸ்வரர் எனும் பெயரில் அபிமுகேஸ்வரர் ஆகி உள்ளார். இறைவன் சற்று பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். கோயில் கடந்த சில வருடங்களாக திருப்பணி செய்யப்பட்டு வருகின்றது. சுற்று மதில் சுவர் கொண்ட கோயில், கிழக்கில் அலங்கார வாயில் உள்ளது. இறைவி தெற்கு நோக்கி சிறிய கருவறை கொண்டுள்ளார், பெயர் ஆனந்தவல்லி.
இறைவன் முன்னர் நீண்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது அதில் நந்தி பலிபீடமும் உள்ளது. கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். கோஷ்ட மூர்த்திகளாக தென்முகன், துர்க்கை உள்ளனர். சண்டேசர் சன்னதியும், அருகில் நவகிரகங்களுக்கு ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தரும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பட்டமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி