Monday Nov 25, 2024

பங்குரா கோகுல்சந்த் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி

பங்குரா கோகுல்சந்த் கோவில், காகுல்நகர், மேற்கு வங்காளம் – 722138

இறைவன்

இறைவன்: சிவன், விஷ்ணு

அறிமுகம்

கோகுல்சந்த் கோவில், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில், பங்குரா மாவட்டத்தின் பிஷ்ணுபூர் உட்பிரிவில் உள்ள ஜாய்ப்பூர் தொகுதியில் உள்ள காகுல்நகர் கிராமத்தில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பஞ்சரத்னா கோவில் அமைந்துள்ளது. காகுல்நகரில் உள்ள கோகுல்சந்த் கோவில், மல்லா மன்னர்களின் பண்டைய பஞ்சரத்னா கோவில்களில் ஒன்றாகும். பஞ்சரத்னா வங்காளத்தில் மிகவும் பிரபலமான கோவிலாகும். 45 அடி சதுர அடித்தளத்துடன், கட்டப்பட்டுள்ளது. இது 1643 இல் கட்டப்பட்டது. மோசமாக சேதமடைந்த நிலையில் கோவிலுள்ளது.

புராண முக்கியத்துவம்

காகுல்நகரில் உள்ள இந்த பஞ்சரத்னா (ஐந்து) கோவில் பங்குரா மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய கற்க்கோவிலாகும். இது 64 அடி உயரம் மற்றும் கோவில் வளாகத்தின் பரப்பளவு 23,500 சதுர அடி. கோவிலில் உள்ள ASI தகவல் பலகையின் படி, இது மல்லா அரசர் இரகுநாத் சிம்ஹாவின் ஆட்சிக்காலத்தில் 1643 இல் கட்டப்பட்டது. கோவில் கட்டுமான பாணி பிஷ்ணுபூரில் உள்ள ஷைமராயா கோயிலைப் போன்றது. சுவர் அலங்காரங்கள் விஷ்ணு, சிவன் மற்றும் ராஸ்லீலை உருவங்கள் மற்றும் பிற புராண சம்பவங்களை சித்தரிக்கின்றன. 1996 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையால் கையகப்படுத்தப்படும் வரை இந்த கோவில் மோசமான நிலையில் இருந்தது மற்றும் சூறையாடப்பட்டது. கிருஷ்ணரின் சிலை நீண்ட காலத்திற்க்கு முன்பு பிஷ்ணுபூருக்கு மாற்றப்பட்டது.

காலம்

1643 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காகுல்நகர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பிஷ்ணுபூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கொல்க்கத்தா

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top