Thursday Dec 26, 2024

நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், கடலூர்

முகவரி :

நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில்,

நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டம்,

கடலூர் மாவட்டம் – 607803.

இறைவன்:

அனந்தராம கணபதி

அறிமுகம்:

சில ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் விபுசித்து முனிவர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஓருநாள் இறைவன் கனவில் தோன்றி தமக்கு மணிமுத்தாற்று கரையில் ஆலயம் எழுப்புமாறு கூற, சாதாரண நாடோடி வழக்கை வாழும் தன்னால் எப்படி கோயில் எழுப்ப முடியும் என நினைத்து பேசாமல் இருந்துவிட்டார். மீண்டும் மீண்டும் கனவில் ஆணை வர, ஊர் மக்களை கூட்டி ஆலயம் எழுப்ப உத்தரவு கிடைத்துள்ளதாக கூறி, பணிகளை துவக்குகிறார்.

நித்தம் பணி செய்த மக்களுக்கு வில்வ இலைகளை பறித்து கொடுக்க அது அவரவர் பணிக்கேற்ப காசுகளாக மாறியது. மூல மூர்த்தியான லிங்கம் செய்ய இமயமலையில் இருந்து கல் எடுத்துவந்து செய்யும் போது லிங்கம் சிதிலமாகிறது. இறைவன் கனவில் தோன்றி நீ விக்னேஸ்வர பூஜை செய்யாமல் பணிகளை துவங்கியதால் இப்படி ஏற்ப்பட்டது என கூறுகிறார். விபுசித்து முனிவரோ உன்னை தவிர வேறு தெய்வத்தை வணங்க மாட்டேன் என கூறுகிறார். தான் என்ற அகம்பாவமும், நெறிமுறைகளை கடைபிடிக்காத உனது எண்ணமே நீ வடித்த இந்த கோயிலிலும் பிரதிபலிக்கும் என்பதால், இறைவன் நீ இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்ய தகுதியானவன் இல்லை என கூறி இத்தலத்தினை விட்டு உடனடியாக வெளியேறு என ஆணையிடுகிறார்.

விபுசித்து என்னை மன்னியுங்கள் என கதறி துடித்து தன்னை மன்னிக்குமாறு மன்றாடுகிறார். இறைவனும் மனமிரங்கி, இங்கிருந்து வடகிழக்கில் சில காத தூரம் செல் அங்கே நான் உன்னை அழைக்கும் போது மேற்கு நோக்கி திரும்பி பார்த்தல் நான் காட்சி தருவேன். அங்கேயே தங்கி மக்களுக்கு நல்வாழ்வு பணிகளை செய்து வா என கூறி அனுப்புகிறார். அவ்வாறு செல்லும்போது இன்றைய நெய்வேலி எனும் நெய்வனத்தில் அழைக்கிறார். திரும்பி பார்க்கும் விபுசித்து முனிவருக்கு இறைவன் இறைவி இருவரும் காட்சி தருகின்றனர். [இலுப்பை மரங்களைத்தான் நெய் மரம் என்கின்றனர் என நினைக்கிறேன்] விபுசித்துவும் இறைவன் ஆணைப்படியே அங்கேயே தங்கி முக்தியடைகிறார்.

அவ்வாறு இறைவன் காட்சி தந்த இடம் தான் இன்று நாம் காணும் தலமான அனந்தராம கணபதி ஆலயம் இருக்குமிடம். பல காலம் சென்ற பின்னர் சேங்காலிபுரம் உபன்யாசகர் அனந்தராமதீக்ஷதர் லிங்க மூர்த்தியை கண்டு பிடித்து அருகில் நேர்மறை அதிர்வலைகள் இருப்பதை உணர்ந்து ஒரு இந்த விபுசித்து முனிவர் சித்தியடைந்த இடத்தையும் கண்டுபிடிக்கிறார். இவ்வாறு அவர் கண்டுபிடித்த இடத்தில் தற்போது, கிழக்கு நோக்கிய லிங்க மூர்த்தியையும் அம்பிகையும் பிரதிஷ்டை செய்து அதற்கு அமிர்தகடேசர் அபிராமி என பெயரிட்டு கோயில் அமைத்துள்ளனர்.

மேற்கு நோக்கிய விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்து அதற்கு தீக்ஷதரின் பெயரை வைத்து அனந்தராம கணபதி ஆலயம் என அமைக்கின்றனர். முன்னர் அவர் உருவாக்கிய ஆலயம் தான் திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் ஆகும். இத்திருக்கோயில் பிரதானமாக மேற்கு நோக்கிய விநாயகர் வீற்றிருக்கிறார். எதிரில் நீண்ட தகர கொட்டகை, பளிங்கு தரையுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கி இறைவன் அமிர்தகடேசர் என்றும், அம்பிகை அபிராமி எனவும் கோயில் கொண்டுள்ளனர். கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேர் எதிரில் நந்தி உள்ளார். கோட்டங்களில் தென்முகன், விஷ்ணு துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் வடக்கில் சண்டேசர் வடகிழக்கில் பைரவர் சிற்றாலயம், நவகிரகங்களும் உள்ளன. திருக்கோயிலில் தென்புறம் இந்த விபுசித்து முனிவருக்கான சன்னதி அமைந்துள்ளது. நகரியத்தில் உள்ள கோயில் என்பதால் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாமல் நடக்கின்றது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெய்வேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நெய்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top