நெய்தவாசல் முனிவாசகப் பெருமான் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
நெய்தவாசல் முனிவாசகப்பெருமான் திருக்கோயில், நெய்தவாசல், நெய்தவாசல் அஞ்சல், வழி பூம்புகார், சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் – 609110
இறைவன்
இறைவன்: முனிவாசகப்பெருமான் இறைவி: மதுரபாஷிணி
அறிமுகம்
நெய்தவாசல் முனிவாசகப்பெருமான் திருக்கோயில், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டம் பூம்புகார் வழியில் அமைந்துள்ள நெய்தவாசல் என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. நெய்தல் வாயில் தற்போது நெய்தவாசல் என்று அழைக்கப்படுகிறது. “காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் இருந்த நெய்தலங்கானல் இதுவாக இருக்கலாம். கடல் கொள்ளப்பட்டு எஞ்சிய இவ்வூர் ‘நெய்தல் வாசல்’ என்ற பெயருடன் உள்ளது” என்பதும் ஒரு கருத்தாக உள்ளது.இறைவன் முனிவாசகப்பெருமான் என்றும் இறைவி மதுரபாஷிணி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஆலயத்திற்கு இராஜ கோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே நந்தியெம்பெருமான் காணப்படுகிறார். அதை அடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் 2-வது நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலுக்கு மேலே சுதை வடிவில் இறைவன் ரிஷபத்தின் மீது அம்பிகையுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். உள்ளே கருவறையில் இறைவன் ருத்திராட்சப் பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வெளிப் பிராகாரத்தில் கன்னி மூலையில் விநாயகர் தனி சந்நிதியில் உள்ளார். அதையடுத்து மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கிலிருந்தும் இறைவன் கருவறைக்குச் செல்ல ஒரு வாயில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூம்புகார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி