Sunday Nov 24, 2024

நெப்பத்தூர் சந்திர மௌலீஸ்வரர் சிவன் கோயில்

முகவரி

நெப்பத்தூர் சந்திர மௌலீஸ்வரர் சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 106.

இறைவன்

இறைவன்-சந்திர மௌலீஸ்வரர் இறைவி- மகாதிரிபுரசுந்தரி

அறிமுகம்

சீர்காழி- திருமுல்லைவாயில் சாலையில் உள்ள எடமணல் எனும் ஊரில் வலதுபுறம் திரும்பி உப்பனாற்றினை கடந்து திருநகரி தாண்டி அடுத்த ஊர் நெப்பத்தூர். மங்கைமடம்- திருநகரி சாலையிலும் இவ்வூரை அடையலாம் அகலம் குறைவான ஒற்றை சாலை தான் , பிரதான சாலை இதன் ஓரம் சற்று கிழக்கில் உள்ளது கோயில் பிரதான சாலையில் இருந்து செல்ல குறுகலான பாதை உள்ளது அதன் வழி சென்று கோயிலை அடையலாம். பத்து சென்ட் பரப்பளவு கொண்ட கோயில் கிழக்கு நோக்கி சிறிய கருவறையில் இறைவன் சந்திரமௌலீஸ்வரர் வீற்றிருக்கிறார்.அருகில் இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி உள்ளார்.இங்கு சூரியன், சந்திரன் வழிபட்டதாக ஐதீகம். அம்பிகையின் எதிரில் மகாவிஷ்ணுவின் சன்னதி உள்ளது சிறப்பாகும்..அதுபோல் விநாயகர் சன்னதி எதிரில் சூரியன் சன்னதி உள்ளது. முருகன்,மகாலட்சுமி,நவகிரகங்கள் இல்லை இது பற்றி கோயில் அர்ச்சகர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் கூறியது, இக்கோயில் சிவபஞ்சயனத ஆலயம் ஆகும், இத் கோயிலின் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு நிவேதனம் செய்து பூசிக்கவேண்டும்.ஒருவரின் நிவேதனம் மற்றவருக்கு செய்தல் ஆகாது என்றார். இது தனியார் அறக்கட்டளை சார்ந்த கோயில் ஆகும். அதனால் பிற மக்கள் இங்கு வருவதில்லை, எனினும் நாங்கள் சென்றிருந்த நேரம் மதியம் 12, அந்த நேரத்திலும் அந்த அர்ச்சகர் பொறுப்பாக அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வித்து மாற்று ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்து கொண்டிருந்ததை எண்ணி வியதோம். அபிஷேகம், அர்ச்சனை,என அனைத்துக்கும் மொத்த ரேட் பேசும் நபர்களிடையே இவர் போன்ற இறைவன் மீது பற்றும்,அன்பும் கொண்ட நேர்மையானவர்களும் உள்ளனர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

தனியார் அறக்கட்டளை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வேதராஜபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top