நெடுவாசல் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
நெடுவாசல் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், நெடுவாசல், நல்லிச்சேரி அஞ்சல், வழி சங்கரன்பந்தல், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609309
இறைவன்
இறைவன்: சௌந்தரேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
நெடுவாசல் சௌந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், நெடுவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலை வழியிலுள்ள செம்பொனார்கோவில் அடைந்து அங்கிருந்து தென்கிழக்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள நெடுவாசலை அடையலாம். மயிலாடுதுறை – பொறையார் சாலை வழியிலுள்ள சங்கரன்பந்தல் அடைந்து அங்கிருந்தும் ஆட்டோ மூலம் நெடுவாசல் சென்று அடையலாம். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் சௌந்தரேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதிகளும், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சுப்ரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இக்கோயில் அப்பர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெருங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி