நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி :
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,
வடக்குமாட வீதி, ஸ்டெர்லிங் ரோடு,
நுங்கம்பாக்கம், சென்னை – 600034.
போன்: +91 44 28270990
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் ரோடு பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள வடக்குமாட வீதியில் இருக்கிறது. திருவானைக்காவல் அடுத்தபடியாக இக்கோயிலில் அன்னை அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுவது சிறப்பு. இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும்தான் அவளுக்கு திருவீதி உலா நடைபெறுகிறது. இங்குள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது இக்கோயிலின் தனி சிறப்பு. அகத்தீஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
புராண முக்கியத்துவம் :
அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், வாமனரால் இழந்த தன் கண்பார்வையைப் பெற சிவ வழிபாடு செய்தார். அதே சமயத்தில் அம்பிகையும் சிவனாரை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தாள். இருவரில் யாருக்கு முதலில் அருள்வது என்று சிவபிரான் யோசித்தபோது, சுக்ரனுக்கே முதலில் ஆசிவழங்கும்படி விட்டுக்கொடுத்தாள் அம்பிகை . அதனால் தனக்கு உரிய வெள்ளிக் கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்கவேண்டும் என பூஜிப்பவர்க்கு சுக்ரனின் தோஷம் வரக்கூடாது என்றாள் தேவி. ஏற்றார் சுக்ரபகவான். சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை. அன்று பூஜை ஏற்பதால் இங்குள்ள அம்மன் சுக்ரவார அம்மன் என அழைக்கப்படுகிறாள்.
நம்பிக்கைகள்:
செல்வம், கல்வி, பணி, பதவி, திருமணம், என எது வேண்டிக் கொண்டாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும்தான் அவளுக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.
திருவிழாக்கள்:
சிவராத்திரி, நவராத்திரி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்டெர்லிங் ரோடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
நுங்கம்பாக்கம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை