நீலக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
நீலக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
CUTN நீலக்குடி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
திருவாருரின் வடமேற்கில் உள்ளதுதான் இந்த நீலக்குடி. மத்திய பல்கலைகழகம் இருப்பதால் CUTN நீலக்குடி என்றால் அனைவருக்கும் தெரியும். வெட்டாறின் தென் கரையில் பிரதான சாலையை ஒட்டியே கோயில் உள்ளதால் தேட தேவையில்லை. கோயிலின் எதிரில் பெரிய அரசமரம் உள்ளது. கோயிலின் தென்புறம் தீர்த்த குளம் ஒன்றும் உள்ளது. கிழக்கு நோக்கிய சிவன் கோயில், இறைவன் காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், இறைவி காசி விசாலாட்சி. தெற்கு நோக்கியும் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் முருகன் மகாலட்சுமி சிற்றாலயம் கொண்டுள்ளனர். சிற்றாலயங்களின் இடையில் இரு லிங்கங்களும் அருகில் சிறு நாகர்களும் உள்ளனர். வடகிழக்கில் பைரவர், சனி, சூரியன் உள்ளனர். சிதைவடைந்து மீளுருவாக்கம் செய்யப்பட்ட புதியகோயில் இதுவாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நீலக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி