நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் – 614404. போன்: +91 94441 39199, 8012162370
இறைவன்
இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாக்ஷி
அறிமுகம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் நகரில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் காசி விஸ்வநாதர் என்றும், தாயார் விசாலாக்ஷி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர் சோமாஸ்கந்தர். ஸ்தல விருட்சம் என்பது பன்னீர் மற்றும் வில்வ மரமாகும். வெண்ணாறு மற்றும் கோயிலில் உள்ள கிணறு ஆகியவை இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தங்களாகும்.
புராண முக்கியத்துவம்
பிரதாப சிம்ம மகாராஜா 1739-ம் ஆண்டு முதல் 1763-ம் ஆண்டில் அவருடைய காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்தாக கூறப்படுகிறது. பெரும் கீர்த்தி மானாக விளங்கியவர் வெங்கோஜியின் புதல்வர். இவர் 24 ஆண்டுகள் அரசு புரிந்துள்ளார். படிப்படியாக கோயில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. 1924-ம் ஆண்டு சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. 1956-ம் ஆண்டு மகா சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. பழங்காலத்தில் கோயில் பராமரித்து பூஜைகள் நடந்து வருகிறது. தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் நிர்வாக குழு மூலம் பல்வேறுப்பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள சந்தானராமசமி கோயில்கட்டிய காலத்தில் இக்கோயிலும் கட்டப்பட்டுள்ளது. தற்போது மேலும் பல்வேறு வளர்ச்சிப் பெற்று கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. மேலும் கோயிலுக்கான முழுமையான வரலாறு தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் மேற்பட்ட கோயில். 1990-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகத்திற்காக பணிகள் துவங்கியுள்ளது.
நம்பிக்கைகள்
புத்திரபாக்கியம், கல்வி, திருமணத்தடை, சகல ஐஸ்வர்யங்கள், செல்வவளம் மற்றும் அரசியலில் உயர் பதவிகளுக்கும் கிடைக்க வேண்டியும் பிரார்த்திக்கின்றன. இது ஒரு பரிகார ஸ்தலமாக விளங்குவதால் ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
மகாராஷ்டிர ராஜ்யத்தை ஆதியில் உருவாக்கிய வெங்கோஜி மகாராஜாவின் பரம்பரையில் தோன்றிய பிரதாபசிம்ம மகாராஜா நீடாமங்கலம் என்னும் மன்னன் இவ்வூரில் இரண்டு கோயில்களும், சத்திரம் ஒன்றையும் 1761ம் ஆண்டில் கட்டினார். இக்கோயிலுக்கு, சந்தானராமசாமியான கோயில் சிறப்பு சேர்க்கிறது. இங்குள்ள சுவாமிகள் சிலைகள் விக்கிரகங்களாக உள்ளதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. விசாலாட்சியம்மன் ஐம்பொன்னால் செய்யப்பட்டுள்ளதால், எப்போதும் அலங்காரகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஊருக்கும் மேற்கு பக்கம் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்றுப் பக்கமும் நீரோட்டம் நிறைந்துள்ளது. வெண்ணாறு,கோரையாறு மற்றும் பாமணி என மூன்று ஆறுகள் ஓடுகிறது. கிழக்கு மற்றும் தெற்கு இருபக்கம் வழி, தெற்கு பக்கம் மூன்று நிலை ராஜ கோபுரம் மூன்று கலசலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் கொடி மரம், தென் கிழக்கில் மடப்பள்ளி, வட கிழக்கில் யாக சாலை அமைந்துள்ளது. அதன் அருகில் நவக்கிரகம் மற்றும் சூரியன், சனீஸ்வரர் மேற்கு பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். கிழக்குபக்கம் பார்த்த வகையில் மூலவர் காசிவிஸ்வநாதர், தெற்கு பக்கம் விசாலாட்சியம்மன் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியிலும், நடராஜர் தெற்குப்பக்கம் 5 கலசம் கூடிய தனி சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் 300 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும் கொடி மரம் அருகில் மண்படம் கட்டும் பணி நடந்து வருகிறது. கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் விநாயகர், குரு பகவான் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் தெற்குபக்கம் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். மகாலட்சுமி, சரஸ்வதி, வள்ளி,தெய்வானையுடன் சுப்ரமணியர் கிழக்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். மேலும் இஷ்ட தெய்வங்களை விக்கிரகங்களாக வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
திருவிழாக்கள்
வைகாசி விசாகம், திருவாதிரை, அஷ்டமி பூஜை, நவராத்திரி உள்ளிட்ட சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி