நாகலூர் நாகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நாகலூர் நாகநாதர் சிவன்கோயில்,
நாகலூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகை மாவட்டம் – 610106.
இறைவன்:
நாகநாதர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
திருவாரூர் தென் கிழக்கில் 14-கிமீ தூரத்தில் உள்ளது, வழி – திருவாரூரில் இருந்து திருத்துறைபூண்டி சாலையில் சென்று மாத்தூர் பாலத்தில் திரும்பி புதுபத்தூர் வழியாக செல்லவேண்டும். கிழக்கு நோக்கிய கோயில், அதன் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. கோயில் சிறியது தான், இறைவன் -நாகநாதர் இறைவி –சௌந்தரநாயகி. இத்தல இறைவன் ஆதிசேஷனால் மாசி சிவராத்திரியில் வழிபடப்பட்டவர். இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். விமானம் அழகிய வேசர வடிவ விமானமாகும். முகப்பில் அர்த்த மண்டபம் மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் வெளியில் நந்தி சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார் பலிபீடமும் உள்ளது.
கருவறை கோட்டங்களில் தெய்வங்கள் ஏதும் இல்லை, துர்க்கை மட்டும் உள்ளார். பிரகார சிற்றாலயம் விநாயகன் மற்றும் முருகனுக்கு உள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். இவை மூன்றும் அழகான சிலைவடிவங்கள். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். வடகிழக்கில் நவகிரகம் மற்றும் மூன்று நாகர்கள் உள்ளன இவையே ஆதிசேஷன் மற்றும் அவரது துணைகளாகும். ஆதிசேஷனே பூஜை செய்த தலம் என்பதால் நாகதோஷம் ராகுதோஷம் ஆகியவை நீங்க செவ்வாய் கிழமைகளில் இவ்வாலயத்தில் வழிபடுவது சிறப்பானது. சுவாதி உத்திரட்டாதி, ரேவதி, அனுஷம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு இத்தலம் சிறப்பானது. மாதசிவராத்திரி அன்றோ அல்லது மாசி சிவராத்திரி அன்று வழிபடுதல் கூடுதல் பலனை தர வல்லது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி