Friday Nov 15, 2024

நாகப்பட்டினம் வீரபத்திரசுவாமி திருக்கோயில்

முகவரி :

நாகப்பட்டினம் வீரபத்திரசுவாமி திருக்கோயில்,

நாகப்பட்டினம் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 611003.

இறைவன்:

வீரபத்திரசுவாமி

இறைவி:

விசாலாட்சி

அறிமுகம்:

நாகை பன்னிரு சிவாலயங்களில் விஸ்வநாதர் சமேத விசாலாட்சி திருக்கோயில் இது வீரபத்திரர் வழிபட்ட சிறப்புக்குரியதாகும். தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது பிரதான கடைதெருவில் அமைந்துள்ளது. மூலவர் இறைவன் விஸ்வநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். வீரமாகாளியம்மன் வடக்கு நோக்கியுள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரமன் சண்டேசர் துர்க்கை உள்ளனர்.

 தெற்கு கோபுரம் வழி உள்ளே நுழையும் பொது இடது புறம் பிரகார சுற்றில் வீரபத்திர சுவாமிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இவர் தெற்கு நோக்கிகோயில் கொண்டுள்ளார். இவைதவிர மகாகணபதி முருகன் மகாலட்சுமி இவர்களுக்கும் தனி சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் பெரிய அரசமரம் ஒன்றுள்ளது அதனடியில் சில நாகர்கள் உள்ளனர்.

ஐப்பசி பூரம் அன்று வீரபத்திரரின் சாப நிவர்த்தி ஐதீகவிழா நடைபெற்று வருகிறது. உச்சிகாலத்தில் வீரபத்திரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அகோரவீரபத்திரர் உற்சவமூர்த்தி விஸ்வநாதர் சன்னதிக்கு எழுந்தருள்வார் வீரபத்திரர் சிவ பூஜை செய்து சாப நிவர்த்தி பெறுவதாக ஐதீகம் வீரபத்திரரின் முன் மண்டபத்தில் வீரசக்தி எழுந்தருளி உள்ளார். காவல் தெய்வமாக வீரமாகாளி அருகில் உள்ளர் தலவிருட்சம்-இலந்தைமரம் தீர்த்தம்-வீரகங்கை அருகில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 பிரம்மாவின் மகனான தட்சன் சிவனை அழைக்காமல் மற்ற தேவர்களை அழைத்து யாக பூஜை செய்கிறான் அவனது தேவியையும் அவமானப்படுத்தினான். தட்சனின் ஆணவத்தை அழிக்க சிவன் தோற்றுவித்தவர்தான் வீரபத்திரர். வீரபத்திரர் அவன் யாகத்தை அழித்து தேவர்களையும் அவனையும் தண்டித்தார் யாகத்தினை கலைத்த செயலால் தோஷம் ஏற்பட்டது. சிவனை வேண்ட சிவனும் யாகத்தில் பயன்படுத்திய மாலைகளை கங்கையில் விட்டு அவை கரையேறும் இடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபடு என கூறினார். அதன்படி மாலைகளை கங்கையில் விட நாகையில் வந்து கரை சேர்ந்தன. வீரபத்திரரும் காளியை காவலுக்கு நிற்க வைத்து சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பித்தார், தோஷம் நீங்க பெற்ற அந்த இடமே இந்த வீரபத்திரர் வழிபட்ட விஸ்வநாதர் கோயில். பொதுவாக வீரபத்திரர் ஆட்டு தலையுடன் கை கூப்பிய வண்ணம் காணப்படுவார் இங்கு வீரபத்திரரின் கையில் தட்சனின் வெட்டப்பட்ட தலை இருப்பது வேறங்கும் காண இயலாத சிறப்பு ஆகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top