Friday Nov 15, 2024

நாகப்பட்டினம் நடுவதீஸ்வரர் திருக்கோயில்

முகவரி :

நாகப்பட்டினம் நடுவதீஸ்வரர் திருக்கோயில்,

மேலகோட்டை வாசல், நாகூர் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 611003.

இறைவன்:

மத்தியபுரீஸ்வரர் என்றும் நடுவதீஸ்வரர்

அறிமுகம்:

நாகை நகரின் நடுவில் உள்ளதாலும் அனைத்து கோயில்களுக்கும் இதுவே மையமாக விளங்குவதாலும் இக்கோயில் நடுவர்கோயில் என்றும் நடுவதீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது. வடமொழியில் இதனை மத்தியபுரி என குறிப்பிடுகின்றனர் நாகை பன்னிரண்டு சிவன் கோயில்களில் ஒன்றான இக்கோயில் தேசிய மேல்நிலைபள்ளி சாலையின் பின்புற தெருவில் உள்ளது கிழக்கு நோக்கி, ஐந்து நிலை கோபுரம் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் கோபுரத்தின் வெளியில் இடதுபுறம் மத்தியத்தலேச விநாயகர் உள்ளார். அதாவது நடுவில் இருக்கும் தலவிநாயகர் என பொருள். கோபுரம் தாண்டியதும் பலிபீடம் கொடிமரம் உள்ளது அதனை அடுத்து ஒரு மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கொடிமரத்தின் கீழ் பிரம்மன் யமன் சிவலிங்க வழிபாடு செய்வது போல் சிற்பம் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் அழகிய லிங்கமூர்த்தியாக உள்ளார். மத்தியபுரீஸ்வரர் என்றும் நடுவதீஸ்வரர் எனவும் அழைக்கின்றனர்.

புராண முக்கியத்துவம் :

                 ஊழிக்கால அழிவின் பின்னர் உலக படைப்பிற்காக திருமாலின் ஆலோசனைப்படி பிரம்மா இத்தலம் வந்து சிவலிங்க பிரதிஷ்டையும் தீர்த்தமும் அமைத்து வழிபட்டு பின் தனது படைப்பு தொழிலை தொடங்கினார் என ஐதீகம் இக்கோயிலின் பின்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. திருக்கடையூரில் சிவபெருமான் எமதர்மனை சம்ஹாரம் செய்தபின் எமனை இறைவன் மீண்டும் உலக நன்மைக்காக உயிர்ப்பிக்கிறார்; தனது தவறுக்காக தோஷ நிவர்த்தி தேட எமன் நாகை வந்து இத்தல ஈசனை தீர்த்தம் அமைத்து வழிபட்டு விமோசனமும், இழந்த பதவியையும் பெற்றான். இந்த எமதீர்த்தத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து எமவாதனை உள்ளவர்க்கு கொடுக்கும்போது மித்ரு பயம் நீங்கி சிவபதவி அடைவர் என்பது ஐதீகம்.

காலம்

1300 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top