நல்லாடை காசிவிஸ்வநாதர் கோயில், மயிலாடுதுறை
முகவரி :
நல்லாடை காசிவிஸ்வநாதர் கோயில்
நல்லாடை, தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609306.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
காசிவிசாலாட்சி
அறிமுகம்:
மயிலாடுதுறை அடுத்துள்ள செம்பனார்கோயிலின் தெற்கில் செல்லும் காரைக்கால் சாலையில் 12 கிமீ தூரத்தில் உள்ளது நல்லாடை. இங்கு மிக பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. அதன் தெற்கில் பிரதான சாலையிலேயே ஒரு அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் உள்ளது இந்த காசி விஸ்வநாதர். காசிக்கு சென்று வந்ததன் பலனை சுற்றத்தாரும் அடையவேண்டும் என நர்மதை நதியில் இருந்து பாணலிங்கம் ஒன்றை கொண்டு வந்து தமது ஊரில் பிரதிஷ்டை செய்தல் வழக்கம். அவற்றில் ஒன்று தான் இங்கே காசிவிஸ்வநாதர் எனும் பெயரில் நம்மை ஆட்கொள்ள காத்திருக்கிறார்.
இறைவன் சிறிதாக இருந்தாலும் கீர்த்தி மிக்கவராக இருப்பார். கிழக்கு நோக்கிய கோயில், தற்போது தான் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும், புதிதாய் தங்க நிற வண்ண பூச்சு கொண்டு அழகுடன் காட்சியளிக்கிறது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறையில் வீற்றிருக்கின்றனர். இறைவன் எதிரில் அழகிய நந்தி உள்ளார் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் முருகருக்கு தனி சிற்றாலயங்கள் கட்டப்பட்டு தங்க நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. உச்சி வெயில் நேரத்தில் பொற்கோயில் போல தகதகவென காட்சியளிக்கிறது. கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார் சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். பைரவர் தனி மாடத்தில் உள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நல்லாடை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி