Tuesday Dec 03, 2024

நந்தப் பிரயாக் ( ஜோஷிமட்) ஸ்ரீ பரமபுருஷன் திருக்கோயில், உத்தரகண்ட்

முகவரி

அருள்மிகு ஸ்ரீ பரமபுருஷன் திருக்கோயில், நந்தப் பிரயாக் ( ஜோஷிமட்), ஜோஷிமத், உத்தரகண்ட் 246443

இறைவன்

இறைவன்: புஜங்கசயனம் இறைவி: பர்மிளா தையர்

அறிமுகம்

திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு. இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய புஜங்க சயனக் கோலத்தில் பரம புருஷன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பரிமளவல்லி நாச்சியார் தீர்த்தம் இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானசரோவரம் ஆகியன. விமானம் கோவர்த்தன விமானம் என்ற அமைப்பினைச் சார்ந்தது. திருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.

புராண முக்கியத்துவம்

திருமங்கையாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது மங்களாசாசனத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள ஸ்தலங்களில் சிலவற்றை மங்களாசாசனம் செய்து கொண்டே வந்து தென்னாடு புகருகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார். அவரது முதற்பதிகம் விளைந்த திவ்யதேசம் இதுதான்.

சிறப்பு அம்சங்கள்

திருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.

காலம்

2000 – 3000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

உத்தரகண்ட்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ரிஷிகேஷ்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ரிஷிகேஷ்

அருகிலுள்ள விமான நிலையம்

டேராடூன்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top