Wednesday Dec 18, 2024

தொழுதூர் நல்ல மாரியம்மன் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர் – 612 804, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 94443 54461, +91- 94437 45732

இறைவன்

இறைவி: நல்ல மாரியம்மன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள நல்ல மாரியம்மன் கோயில் மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாதப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வூரின் பழைமையான பெயர் கர்மரங்க வன ஷேத்திரம் ஆகும். கர்மவரங்க மரங்கள் நிறைந்து இருந்ததால் இது கர்மரங்க வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. இந்த கர்மரங்க மரத்திற்கு தம்பரத்தை மரம் என்ற பெயரும் உண்டு.

புராண முக்கியத்துவம்

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. இவர்களது மகன் பரசுராமன். ரேணுகாதேவி தன் கற்பின் வலிமையால், ஆற்றங்கரையில் இருக்கும் ஈர மணலில் குயவர்கள் (வேளார்) செய்வது போல் குடம் செய்து அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தங்கள் ஆஸ்ரமத்து பூஜைக்காக கொண்டு செல்வாள். பச்சை மணலில் குடம் பிடித்து அது காய்வதற்குள் தண்ணீர் கொண்டு போவதென்றால் நடக்கிற காரியமா? அவ்வளவு அரிய கற்புத்திறமுடையவள் அவள். ஒருநாள் வானத்தில் அழகே வடிவான கந்தர்வன் ஒருவன் தன் தேரில் சென்று கொண்டிருந்தான். அவனது உருவம் தண்ணீரில் தெரிந்தது. ஏறிட்டுப் பார்த்த ரேணுகா, “”ஆஹா..உலகத்தில் இவ்வளவு அழகானவர்களும் இருப்பார்களா?” என சாதரணமாகத்தான் நினைத்தாள். இதனால் அவளது மனம் களங்கப்பட்டு விடவில்லை. இருப்பினும், அவள் அன்று செய்த குடம் உடைந்து விட்டது. வெறுங்கையுடன் ஆஸ்ரமம் திரும்பிய ரேணுகாவின் நிலையை ஜமதக்னி முனிவர் புரிந்து கொண்டார். தன் மனைவியின் கற்புத்திறன் களங்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டி, தன் மகன் பரசுராமனை அழைத்து அவளை வெட்டித் தள்ளும்படி உத்தரவிட்டார். தந்தை சொல்லை மதித்த அந்த மைந்தர் அவ்வாறே செய்து விட்டு, கதறி அழுதார். ஜமதக்னி முனிவர் மகிழ்ச்சியுடன், “”உன் சகோதரர்கள் என் சொல் கேளாமல் தாயை வெட்ட மறுத்து விட்டனர். நீ என் சொல்லைக் கேட்டாய். எனவே, ஏதாவது வரம் கேள்,” என்றார். தன் தாயின் உயிரைத் திரும்பக் கேட்டார். ஜமதக்னியும் அவளுக்கு உயிர் கொடுத்து, அவளோடு தொடர்ந்து வாழ முடியாதெனக் கூறி, அவள் தனக்கு தினமும் தண்ணீர் எடுத்து வந்து உதவியதால் மாரியம்மன் என்ற பெயரில் மக்களுக்கும் நல்ல நீர் கொடுக்கும் அம்பிகையாக விளங்க அருள் பாலித்தார். அவள் தினமும் குடம் செய்து தண்ணீர் எடுத்து வந்தமையால் குயவர்களின் குல தெய்வமாகவும் ஆனாள். தொழுதூர் கிராம வேளார் மக்கள் அம்பிகையை தங்கள் தெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

நல்ல மாரியம்மன் மூலவராக உள்ள இக்கோயிலில் தேவியருடன் கழுவுடையான், பெரியாச்சி, முனீஸ்வரர், பொம்மி, வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், காத்தவராயன், கருப்பழகி, ஆரியமாலா, தொட்டியத்து சின்னான் ஆகிய காவல் தெய்வங்களும் உள்ளனர். கண்நோய் உள்ளவர்கள் குறிப்பாக பூ விழுந்து கண்ணின் அழகு கெட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். நந்தியாவட்டை பூ மூலம் இதற்காக கோயிலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் துவங்கி 18 நாட்கள் விழா நடத்தப்படும். தேரோட்டமும் உண்டு

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆலத்தம்பாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருத்துறைப்பூண்டி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top