தொழுதாலங்குடி அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
தொழுதாலங்குடி அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில் கோமல் சாலை, குத்தாலம்வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 808
இறைவன்
இறைவன் : அபிமுக்தீஸ்வரர்
அறிமுகம்
குத்தாலத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் ஒரு கிமி சென்றால் வலதுபுறம் கோமல் செல்லும் சாலை பிரிகிறது அதில் இரண்டு கிமி சென்றால் மஞ்சளாறு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தை தாண்டியவுடன் வருவது தான் தொழுதாலங்குடி. ஊரினை நோக்கி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மஞ்சளாறு இவ்வூரை பிரிக்காமல் வடக்கில் திரும்பி உத்திரவாகினியாகவும், உடன் கிழக்கு நோக்கி குணக்குவாகினியாகவும் ஊரை சுற்றி செல்வது சிறப்பு. கிழக்கு நோக்கிய கோயில், எனினும் கோயிலுக்கான வாயில் மேற்கில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
சிவபெருமான் திருவிளையாடல்களில் ஒன்றாக இறைவனின் சாபத்தால் உமாதேவி பூலோகத்தில் பசுவாக பிறக்கிறார். உடன் இடையனாக அவரது அண்ணன் திருமாலும் பூலோகம் வருகிறார். உமையும் சாப விமோசனம் வேண்டிப் பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். அப்படி திரியும் காலத்தில் இவ்வூர் ஆலமரத்தடியில் இறைவனை மனதில் நிறுத்தி தொழுததால் இவ்வூர் தொழுத-ஆலங்குடி எனப்பட்டது. இறைவன் இங்கு அபிமுக்தீஸ்வரர் என அழைக்கப்பட்டாலும் இங்கு கிழக்கு நோக்கியே உள்ளார். அம்பிகை அவருக்கு இடப்பாகம் கொண்டு அவரும் கிழக்கு நோக்கியே காட்சி தருகிறார். இது திருமணக்கோலம் ஆதலால் நமது திருமணவேண்டுதல்களை அம்பிகை இன்முகத்துடன் நிறைவேற்றிவைப்பார். பிரகாரத்தில் விநாயகர் முருகன் லட்சுமி ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் வடகிழக்கில் பைரவர் உள்ளார். உள்ளன. கருவறை கோட்டங்களில் தென்முகன், துர்க்கை உள்ளனர். நவகிரகங்கள் இல்லை. இக்கோயிலின் எதிரில் அழகிய குளம் ஒன்றும் உள்ளது. பல ஆண்டுகளின் பின்னர் உள்ளூர் மக்களால் திருப்பணிகள் நடந்தேறி வருகின்றன. திருப்பணிகளை சுவாமிநாத ஐயர்- எனும் ஒய்வு பெற்ற ஆசிரியர் முன்னின்று நடத்தி வருகின்றார். ஆனால் அவர் இறந்து விட்டதால் திருப்பணிகள் நின்றுவிட்டது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தொழுதாலங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி