Wednesday Dec 25, 2024

தொட்டியம் அனலாடீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி :

தொட்டியம் அனலாடீஸ்வரர் திருக்கோயில்,

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் – 621215.

இறைவன்:

அனலாடீஸ்வரர்

இறைவி:

திரிபுர சுந்தரி

அறிமுகம்:

                அனலாடீஸ்வரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் அனலாடீஸ்வரர் என்றும் அம்பாள் திரிபுர சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மபுரம், திரிபுரசம்ஹாரஷேத்திரம், மத்தியாசலஷேத்திரம், துவஷ்டபுரி போன்ற பெயர்களில் புராண காலங்களில் இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுடைய அட்ட வீராட்ட செயல்களில் ஒன்றான திரிபுரங்களை எரித்தலின் போது சிவபெருமான் அம்பின் பொறி தொட்டுச் சென்ற இடமாகும். பிரம்மன் செய்த யாக குண்டம் இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. அதனை ஈஸ்வரி தீர்த்தம் என்கின்றனர்.

புராண முக்கியத்துவம் :

 ரகாசூரனுக்கு வித்யுன்மாலிதாரகாட்சன்கமலாட்சன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் பிரம்மாவை நோக்கி தவமிருந்து பல்வேறு வரங்களைப் பெற்றனர். அதில் ஆகாயத்தில் பொன், வெள்ளி, இரும்பு ஆகிவைகளால் ஆன பறக்கும் கோட்டைகளையும், மூவரையும் ஒரே கனையால் மட்டுமே கொல்ல முடியும் என்ற வரத்தையும் பெற்றார்கள். அக்கோட்டைகளை திரிபுரங்கள் என்று அழைத்தனர்.

மூவரும் அந்தக் கோட்டையை பயன்படுத்தி பல்வேறு தேவர்களையும், உலகங்களையும் அடிமையாக்கினர். இந்திரன்பிரம்மாதிருமால் ஆகியோருடன் தேவர்களும் இணைந்து சிவபெருமானிடம் சென்று தங்களை காக்க வேண்டினர். சிவபெருமான் பூமியை தேராகவும், சந்திர சூரியனை குதிரைகளாகவும், பிரம்மனை சாரதியாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலை தேரின் சிறகாகவும் அமைத்து போர்கலத்திற்கு சென்றார். திரிபுரங்களின் அசுரர்களை அழித்தார். இதனால் சிவபெருமானுக்கு திரிபுர தகன மூர்த்தி, திரிபுராந்தகர், திரிபுரசம்ஹாரர் போன்ற பெயர்கள் கிடைத்தன.

அவ்வாறு முப்புறங்களை எரிக்கும் போது சிவபெருமானின் அம்பின் பொறி தொட்டு சென்ற இடம் துவஷ்டபுரியாகும். இவ்விடம் தற்போது தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு முறை பிரம்மா இத்தலத்திற்கு வந்து யாகமொன்றை செய்தார். அவருடைய யாகத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அந்த அக்னி குண்டத்திலேயே நடனம் ஆடினார். அதனால் இத்தலத்தின் மூலவரை அக்னி நர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

தொட்டியம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top