தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில், கிருஷ்ணகிரி

முகவரி :
அருள்மிகு காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில்,
தேவசமுத்திரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் – 635001.
இறைவன்:
காட்டுவீர ஆஞ்சநேயா்
அறிமுகம்:
காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியை ஒட்டிய தேவசமுத்திரம் என்ற பகுதியில் உள்ள ஓர் ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் கோயில்களில் பல இடங்களில் பல ‘தோற்றங்களில் காட்சியளிப்பார். ஒரு சில இடங்களில் நின்றவாறும் ஒருசில இடங்களில் சுவரில் சாய்ந்தவாறும் காட்சியளிப்பார். காட்டுவீர ஆஞ்சநேயா் இங்கு சாய்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த காட்டு வீர ஆஞ்சநேயா் கோவிலானது, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் செல்லும். சேலம் புறவழிச் சாலையின் அருகே, கிருஷ்ணகிரி நகரிலிருந்து புறவெளியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
ஸ்ரீகாட்டு வீர ஆஞ்சநேயா் கோவில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் தோன்றிய மிகப்பழமை வாய்ந்த கோவிலாகும். முதலில் ஒரு கற்பாறையில் ஆஞ்சநேயரின் உருவம் செதுக்கப்பட்டு பிற்காலத்தில் அங்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை சுற்றிய பகுதிகள் அக்காலத்தில் வனமாக இருந்ததால் இது காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில் என்று பெயர்பெற்றது. ஆஞ்சநேயருக்கு அருகில் யோக நரசிம்மர், லட்சுமி தாயார் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அம்சங்கள்:
பல ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீமத் பாலமுருக நரசிம்ம ஸ்வாமி எனும் சித்தர் ஒருவர் காட்டுவீர ஆஞ்சநேயரை தரிசிக்க வந்துள்ளார். அவர், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் சிறப்பை பெற்றுள்ளது இத்திருத்தலம் என கூறியிருக்கிறார். ஹரிக்கு உகந்தவரான அனுமனும், சிவபெருமானுக்கு உகந்தவரான நந்தீஸ்வரரும் ஒரே இடத்தில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்குமே காணப்படாத அதிசயம் என்றும் கூறியுள்ளார்.
இக்கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது வளரும் நந்திஸ்வரர் ஆவார். மூலஸ்தானத்திலிருந்து இடதுபுறமாக, கோவிலின் வெளிபுறம் பாறையின்மீது நந்திஸ்வரர் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இந்த நந்தி வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
திருவிழாக்கள்:
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.






காலம்
2500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவசமுத்திரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹோசூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்