தேதியூர் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
தேதியூர் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
தேதியூர், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610105.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
திரிலோக சுந்தரி
அறிமுகம்:
நாச்சியார் கோயிலில் இருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் பதினைந்து கிமீ தொலைவில் உள்ளது எரவாஞ்சேரி எனப்படும் தேதியூர். இறையவன்சேரி என்பது எரவாஞ்சேரி ஆகவும், தேர்தகையூர் என்பது தேதியூர் ஆகவும் மாறியுள்ளது. இவ்வூரில் மூன்று சிவன் கோயில்கள் உள்ளன. இக்கோயில் பிரதான சாலையில் எரவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ளது.. அரிசொல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள “லோகசுந்தரி சமேத சுந்தரேஸ்வரர்” ஆலயம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் ஆற்றங்கரை கோயில் என்று பெயர் மாறியது.
2000-மாவது ஆண்டு நடந்த கும்பாபிஷேக காலத்தில் ஆற்றங்கரை கோயிலில் உள்ள முருகப் பெருமான் பின்னமாகி புதுப்பிக்கபட்டு வேறு ஒரு முருகப்பெருமான் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இக்கோயிலில் பூஜை நேரம் தவிர பிற சமயங்களில் பூட்டியே இருக்கிறது. காரணம் இவ்வூரில் இந்துக்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். வெளியூர் பக்தர்களும் வருவதில்லை, அதனால் குருக்கள் பூஜை முடிந்தவுடன் பூட்டிசென்றுவிடுவதாக கூறுகின்றனர்.
புராண முக்கியத்துவம் :
மதுரையில் நடந்த திருக்கல்யாண வைபவத்தை மீண்டும் தரிசிக்க, தேதியூரில் வசித்துவந்த பிராமணர்கள் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரையும் மகாவிஷ்ணுவையும் நினைத்து வேதகோஷம் எழுப்ப பிராமணர்களின் கோரிக்கையை ஏற்று இருவரும் கிளம்பி தேதியூர் கிராமத்துக்கு பிரவேசம் செய்தனர். மகா விஷ்ணுவின் அந்தபுரமாக அமைந்துள்ள விஷ்ணுபுரத்திலும் தங்கி. பின் பக்தர்களுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலம் காண்பித்த தலம் இது. இங்கு இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். ஆற்றங்கரை கோயிலில் அமைந்துள்ள முருகப் பெருமான் தென்திசை நோக்கி காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேதியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி